செவ்வாய், 27 அக்டோபர், 2015

லஞ்சம் கொடுத்தால் பத்திர பதிவு....போர்ஜெரி செய்வது சுலபம்..SSR குடும்பத்துக்கே இதுதான் நிலைமைன்னா...

வாசகர் :  சார் பதிவு அலுவலகங்களில் தனி நபர் அல்லது வாங்குபவர் விற்பவர் மட்டும் சென்று பதிவு செய்வது முடியாத காரியமாகி விட்டது. பத்திர பதிவு எஜன்ட் வந்தாலே ஒழிய மற்றும் லஞ்சம் கொடுத்தாலே ஒழிய பதிவு செய்யப்படுகிறது. வில்லங்கம் என்று வந்தால் நாங்கள் பெயர் மாற்றி கொடுக்கும் பதிவு வேலை மட்டும் தான் செய்வோம் நிலம் இப்போ யார் பெயரில் இருக்கிறது என்று எங்களிடம் மட்டும் உள்ள தச்தாவேஜீகள் பார்த்து தான் கொடுப்போம். அதே நிலத்துக்கு வேறொருவரு வேறொரு பெயரில் அல்லது அதே அபீசிலோ அல்லது வேறெங்காவது பதிவு செய்திருந்தால் அதுக்கு நாங்கள் பொறுப்பல்ல.... இப்படி சொன்னால் அப்புறம் எதுக்கு பதியனும் - இவங்க எந்த லச்சணத்துல வேலை பாக்குறாங்கன்னு இதிலேர்ந்தே தெரியாதா ? பணத்தை பாதுகாத்துகொங்க மக்களே. அது மட்டுமன்றி மூல பத்திரம்ன்னு ஒரு நடைமுறை வச்சிருக்கானுக..
உதாரணத்துக்கு 1980 ஒரு கிழிந்த பத்திரம் கொண்ட ஒரு நிலம் மதிப்பு குறைவாக (மதிப்பு குறைத்து பதிவு நடக்குதுன்னு எல்லா ஆபீசுக்கும் தெரியும்.. உதாரணத்துக்கு வோல்டாஸ் எவ்வளவுக்கு வித்தது எவ்வளவு மதிப்பு உள்ளதுன்னு தெரியும் ஆனா லஞ்சத்தை தவிர ஒன்னும் கேட்கமாட்டாணுக) 2014 ல் போர்ஜரியாக பதிவு செய்யப்படுதுன்னு வச்சுப்போம் இப்போ அதே நிலத்தை 2015 ஜனவரியில் இன்னொருத்தர் பெயருக்கு விற்று அதையே 2015 ஜூலையில் இன்னொருத்தருக்கு விற்றால்.. ஒரிஜினல் 1980 பத்திரத்தின் உடைமையாளர் ஜென்மத்திலும் நிலத்தை மீட்க முடியாது.  
இப்போ ஜனவரி பத்திரம் இருக்கிறதல்லவா.. அது மட்டுமே மூலபத்திரம் என்று கணக்கில் கொள்ளப்படும்.. இதையெல்லாம் விட பினாமி / பவர் வைத்திருப்பவர்கள் நிலத்தை விற்றுவிட்டு உண்மையான உரிமையாளரை ஏமாற்றுவது, நிள அளவை குறைப்பது, என்ரு எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். என்னதான் அடையாள அட்டை நேரடியாக வாங்கிபவர் விற்பவர் வரவேண்டும் என்று சொன்னாலும் அவர்கள் பதிவாளர் எதிரே அனைத்து நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை... சில இடங்கள் இவர் பெயரில் அல்லது அரசாங்க பெயரில் இருக்கிறது என்பது பதிவு அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு நல்லாவே தெரியும்.. இருந்தாலும் பதிவு செய்வார்க. எவ்வளவோ சொல்லலாம் இந்தத்துறை அத்தனை மோசம். தினமலர்.com

கருத்துகள் இல்லை: