ஞாயிறு, 25 அக்டோபர், 2015

வசனகர்த்தா சேத்னா தீர்தஹள்ளிக்கு கொலை மிரட்டல்.. Kannada woman filmmaker threatened..Beef row:


பெங்களூரை சேர்ந்தவர் சேத்தனா தீர்த்தஹள்ளி. பிரபல பெண் எழுத்தாளரான இவர் கன்னடத்தில் 50–க்கும் மேற்பட்ட புனைலி நூல்களை எழுதியுள்ளார். இலக்கிய இதழ்களில் பெண் அடிமைக்கு எதிராக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். திரைப்பட இயக்குனராகவும் உள்ளார். எழுத்தாளர்கள் மீதான வன்முறை, தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர் கொல்லப்பட்ட விவகாரம், கோவிலுக்குள் நுழைந்த தலித் முதியவர் எரிக்கப்பட்ட விவகாரங்களை கண்டித்து தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த மாதம் பெங்களூரில் நடந்த மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்று மாட்டிறைச்சி சாப்பிட்டார். இதையடுத்து பேஸ்புக்கின் பல்வேறு முகவரியில் இருந்து அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் மட்டுமின்றி, பலாத்சாரம் செய்யப்போவதாகவும், முகத்தில் ஆசிட் வீசப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
பெங்களுரு போலீசார் இது தொடர்பாக வுழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மதம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து எதுவும் எழுதக் கூடாது என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. கொலை செய்து விடுவதாக பேஸ்புக் மூலம் மிரட்டுகின்றனர் என்றார் nakkheeran.in

கருத்துகள் இல்லை: