வியாழன், 29 அக்டோபர், 2015

பாசுமதிக்கு 'புவிசார் குறியீடு' இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டி போடுவதால்....

இந்தியாவில் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்கள்:
* பனாரஸ் பட்டு
* டார்ஜிலிங் தேயிலை
* பாஷ்மினா சால்வை
* சந்தேரி பட்டு
* நீலகிரி தேயிலை
* மலபார் மிளகு
* நாக்பூர் ஆரஞ்சு
* காஞ்சிபுரம் பட்டு
* கூர்க் காபி

*அசாம் தேயிலைபுதுடில்லி,:பாசுமதி அரிசிக்கு, 'புவிசார் குறியீடு' பெறுவதில் உள்ள சிக்கலுக்கு, இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பிரியாணி அரிசி எனப்படும் பாசுமதி அரிசியின் பூர்வீகம், பஞ்சாப். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, பஞ்சாப் இரண்டாகப் பிரிந்தது. தற்போது, பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் உள்ள பஞ்சாப் மாநிலங்களில், பாசுமதி அரிசி விளைகிறது. இதுதவிர, ஹரியானா, மேற்கு உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஜம்மு - காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், டில்லி ஆகிய இடங்களிலும், பாசுமதி அரிசி விளைகிறது. இந்த புவி சார் குறியீட்டு பதிவே ஒரு நவீன காலனித்துவ சுரண்டல்தான். காப்புரிமை சட்டம் ஒரு காப்பரெட் வழிப்பறி கொள்ளைதான் ....பட்டா இல்லாத காணி எல்லாம் என்னுது........


பாசுமதியின் விளைச்சல், உற்பத்தி, விற்பனை ஆகியவற்றிற்கு, சட்டபூர்வ உரிமையை பெற, புவிசார் குறியீடு உதவுகிறது. எனவே, பாசுமதிக்கு புவிசார் குறியீடு கோரி, இந்தியாவும், பாகிஸ்தானும் அறிவு சார் சொத்துரிமை வாரியத்திடம் விண்ணப்பித்துள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசமும், 13 மாவட்டங்களில், பாசுமதி அரிசியை பாரம்பரியமாக பயிரிட்டு வருவதாகக் கூறி, புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பித்துள்ளது.

இதை, பாகிஸ்தான் ஏற்க மறுத்து, அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தில், முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கில், அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. புவிசார் குறியீடு கோரிய விண்ணப்பத்தை, மத்திய பிரதேசம் திரும்பப் பெற்றால், இந்தியா - பாக்., இணைந்து, கூட்டாக, பாசுமதிக்கான புவிசார் குறியீடு பெறலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில், புவிசார் குறியீடு யாருக்கும் கிடைக்காத நிலை ஏற்படும். இதை சீனா பயன்படுத்தி, பாகிஸ்தானிடம் இருந்து, பாசுமதி நெல்லை பெற்று, பயிர் செய்து, உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருக்கிறது. இதற்காகவே, கென்யா, தான்சானியா, எத்தியோப்பியா மற்றும் கிழக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சில நாடுகளில், பாசுமதி நெல் விளைவதற்கு ஏற்ற நிலங்களை, சீனா, வளைத்துப் போட்டுள்ளது.

'சீனா, குறைந்த விலையில் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்தால், இந்தியாவிற்கு தான் பாதிப்பு ஏற்படும்; ஏனெனில், பாசுமதி விளையும் பகுதியில், 95 சதவீதம், இந்தியாவிற்குள் உள்ளது' என, வேளாண் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்தார். அதனால், காஷ்மீர் பிரச்னையை தள்ளி வைத்து விட்டு, உடனடியாக, பாசுமதி அரிசியை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உள்ளது. அதற்கு, மத்திய பிரதேசம், புவிசார் குறியீடு தொடர்பான விண்ணப்பத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

சட்டப்பூர்வ உரிமை:ஒரு குறிப்பிட்ட பகுதியில், முதன் முதலாக விளைவிக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட பாரம்பரிய கலாசாரத்துடன் தொடர்புடைய பொருளுக்கு, அந்த இடத்தை மையமாக வைத்து, புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இதனால், சட்ட பாதுகாப்பு கிடைக்கிறது. இந்த குறியீடு பெற்ற பொருளை பிறர் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.தினமலர்.com
இந்தியாவில் புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்கள்:
* பனாரஸ் பட்டு
* டார்ஜிலிங் தேயிலை
* பாஷ்மினா சால்வை
* சந்தேரி பட்டு
* நீலகிரி தேயிலை
* மலபார் மிளகு
* நாக்பூர் ஆரஞ்சு
* காஞ்சிபுரம் பட்டு
* கூர்க் காபி
*அசாம் தேயிலை

கருத்துகள் இல்லை: