திங்கள், 26 அக்டோபர், 2015

நிலநடுக்கம் 7.5 அளவு....ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பலர் பலி..சென்னையிலும் உணரப்பட்டது..

ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடாசாலை கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 12 மாணவிகள் பலி பாகிஸ்தானில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பாடசாலையிலிருந்து வெளியேற முயற்சித்த 12 மாணவிகள் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பல மாணவிகள் அபாயகரமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து, பலர் கட்டிடங்களிலிருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
இந்தக் கடுமையான நிலநடுக்கம் 7.5 அளவு கொண்டது என்றும் அது ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதி நகரான ஃபைசாபாதுக்கு தெற்கே 75 கிலோமீட்டார் அளவில் மையம் கொண்டிருந்தது என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக பாகிஸ்தானில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் பலர் பலி

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் தலைநகரங்களிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அங்கு கட்டிடங்கள் அதிர்ந்துள்ளன.
காபூல் நகரிலுள்ள பொதுமக்கள், இந்த அளவுக்கு கடுமையான நிலநடுக்கத்தை இதுவரை தாங்கள் உணர்ந்தது இல்லை என்று கூறியுள்ளனர்.
அங்கு மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் தொலைதூரப் பகுதியிலுள்ள ஹிந்து குஷ் மலைப் பகுதியிலுள்ள ஃபைசாபாத்துக்கு 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 7.7 அளவு சக்திகொண்ட இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.<>இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடத்துக்கு உணரப்பட்டது. இதையடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் அச்சத்தில் கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர்.
நிலநடுக்கத்தை அடுத்து, ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் தகவல்தொடர்புகளும், மின்சாரமும் தூண்டிக்கப்பட்டுள்ளன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்டுள்ள பாதுப்புகள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை.  bbc.tamil.com

கருத்துகள் இல்லை: