வியாழன், 29 அக்டோபர், 2015

தினமலர்: பா.ஜ. க வில் உள்ள அதிருப்தியாளர்களை களையெடுக்க தலைமை முடிவு !; பீஹார் தேர்தல் முடிந்ததும்...களையெடுப்பு? ஆஹா சுயோரூபம்... அப்புறம் துரோஹி பட்டம்?

புதுடில்லி : கட்சியின் மேலிட தலைவர்களை கடுமையாக விமர்சித்து வரும் அதிருப்தியாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, பா.ஜ., தலைமை முடிவு செய்துள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, கடந்தாண்டு பதவியேற்றதும், ஆட்சியிலும், பா.ஜ., கட்சியிலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட, மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்.
கடும் விமர்சனங்கள்அத்வானிக்கு, கட்சியின் வழிகாட்டும் குழுவில் இடமளிக்கப்பட்டது. ஆனாலும், 'இது, முக்கியத்துவம் இல்லாத பொறுப்பு' என, கட்சியினரால் கூறப்படுகிறது.
துவக்கத்தில், இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு அதிருப்தி தெரிவித்த அத்வானி, பின், அமைதியாகி விட்டார். ஆனாலும், சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா போன்ற தலைவர்கள், பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக, அவ்வப்போது கடும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த அருண் ஷோரி, சமீபத்தில், பா.ஜ., அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து, அறிக்கை வெளியிட்டிருந்தார். ஒரு ஜனநாயக கட்சி அமைப்பில் களையெடுப்பு என்ற வார்த்தை பிரயோகத்துக்கே இடம் இல்லை. இது எல் டி டி பாணி காட்டுமிராண்டித்தனம் . பொதுக்குழு முடிவெடுத்தால் யாரையும் நீக்கலாம். ஆனால் இங்கே சர்வதிகாரி ஒருவர் உருவாகி விட்டார், அவருக்கு கொம்பு சீவிவிட மீடியாக்கள் பணமுதலைகள் ஹிந்து தீவிர வாதிகள் எல்லோரும் பச்சையாக வேலை செய்கிறார்கள். சீக்கிரம் நாகரிக நாடுகளினால் தீண்டத்தகாதவர்கள் என்று....  
சத்ருகன் சின்ஹாவும், பீஹார் சட்டசபை தேர்தலில், தனக்கு பொறுப்பு அளிக்கப்படாததற்கு கடுமையாக
விமர்சித்திருந்தார்.

இதுவரை அதிருப்தியாளர்கள் விஷயத்தில் பொறுமையாக இருந்த பா.ஜ., மேலிடம், தற்போது, கடும் கோபம் அடைந்துஉள்ளது. பீஹார் சட்டசபை தேர்தல் முடிந்ததும், சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா, சுதீந்திர குல்கர்னி உள்ளிட்ட தலைவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:அருண் ஷோரி, தற்போது, பா.ஜ.,வில் உறுப்பினராக இல்லை. இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனாலும், தேர்தல் நேரத்தில், 'மத்திய அரசை, மிக பலவீனமான அரசு, என, அவர் விமர்சித்திருந்ததை கட்சி தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

எனவே, எதிர்காலத்தில் அதிருப்தியாளர்கள் மேலும் உருவாகாமல் இருப்பதற்கு, சில கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு கட்சி மேலிடம் தள்ளப் பட்டுள்ளது. சத்ருகன் சின்ஹா உள்ளிட்ட தலைவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்க கூடியதாக இருந்தாலும் ஆச்சரியம் இல்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பையைச் சேர்ந்த அரசியல் பார்வையாளர் ஜெய்முருக் கூறியதாவது:'மூத்த தலைவர்களால் கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரிய அளவில் பங்காற்ற முடியாது' என, பா.ஜ., மேலிடம் நினைக்கிறது. இதனால், மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. சோதனை களம்பா.ஜ.,வின் இந்த நடவடிக்கைகளுக்கு, பீஹார் சட்டசபை தேர்தல், ஒரு சோதனைக்களமாக இருக்கும்.

பீஹார் தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றால், கட்சி மேலிடத்தின் நடவடிக்கைக்கு ஆதரவு பெருகும்; அதிருப்தியாளர்கள் அமைதியாகி விடுவர். தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்தால், கட்சி மேலிடத்துக்கு எதிராக, மூத்த தலைவர்கள், முன்பை விட, கடும் விமர்சனங்களை தெரிவிப்பர்; அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிருப்தியாளர்கள் யார் யார்?

யஷ்வந்த் சின்ஹா: இவர், வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில், நிதி அமைச்சராக இருந்தார். கடந்த லோக்சபா தேர்தலில், இவருக்கு போட்டியிட, 'சீட்' கொடுக்கப்படவில்லை. இவர் மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ., சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஜெயந்த் சின்ஹா, மத்திய நிதித்துறை இணை அமைச்சராக உள்ளார். ஆனாலும், தனக்கு முக்கிய பொறுப்பு அளிக்கப்படாததால், பா.ஜ., மேலிடத்தை யஷ்வந்த் சின்ஹா, தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

சத்ருகன் சின்ஹா: முன்னாள் நடிகரான இவர், தற்போது, பீஹார் மாநில பா.ஜ., எம்.பி.,யாக உள்ளார். வாஜ்பாய் அமைச்சரவையில், குடும்ப நலத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்த இவருக்கு, மோடி அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், மோடியை,
கடுமையாக விமர்சித்து வருகிறார்.

சுதீந்திர குல்கர்னி: கட்டுரையாளரான இவர், பா.ஜ., மூத்த தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி, நிதின் கட்காரி ஆகியோரின் ஆலோசகராக இருந்தார். சமீபத்தில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவரை அழைத்து வந்து, மும்பையில், புத்தக வெளியீட்டு விழா நடத்தினார்.
இதனால், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவைச் சேர்ந்தவர்கள், இவர் மீது, கறுப்பு பெயின்ட் ஊற்றினர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசை விமர்சித்து, அறிக்கை வெளியிட்டு
வருகிறார்.

அருண் ஷோரி: இவரும், வாஜ்பாய் அரசில் அமைச்சராக இருந்தவர் தான். இவரது சமீபகால அறிக்கைகள் பா.ஜ., மேலிடத்துக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. தற்போது, இவர், பா.ஜ.,வில் உறுப்பினராக இல்லை.

பா.ஜ.,வில், 75 வயதை கடந்தவர்களை, மூளைச் சாவடைந்தவர்களாக, கட்சி மேலிடம் கருதுகிறது. இதனால் தான், எங்களைப் போன்ற தலைவர்களுக்கு எந்த பொறுப்பும் தரப்படுவது இல்லை.

-யஷ்வந்த் சின்ஹா, பா.ஜ., மூத்த தலைவர்

பீஹார் சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெறாது. தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் தான் வெற்றி பெறுவார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் ஜோதிபாசு, தோல்விகளை சந்திக்காத தலைவராக இருந்தார். நிதிஷ் குமாரும் அப்படிப்பட்ட தலைவராக உருவெடுப்பார்.

-சத்ருகன் சின்ஹா, பா.ஜ., - எம்.பி.,

நம் நாட்டில், இதுவரை ஆட்சியில் இருந்த அரசுகளிலேயே, மிக பலவீனமான அரசு, தற்போதைய அரசு தான். தற்போதைய பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடுகள் மிகவும் மோசம். முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கும், தற்போதைய அரசுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

-அருண் ஷோரி, முன்னாள் மத்திய அமைச்சர்

1 கருத்து:

Kaja Bantha Navas சொன்னது…

Wolf government modi is wolf so people should accept intolerance