செவ்வாய், 27 அக்டோபர், 2015

சோட்டா ராஜன்...6 மும்பை வெடிகுண்டு குற்றவாளிகளை கொன்று விட்டாராம்..இனி இவன்- மோடி /.மணிரத்னம் வகையாறாக்களின் ஐடியல் கீரோ?


 சோட்டா ராஜன் மும்பையில் உள்ள இப்ராகிம் கூட்டாளிகள் 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்தார். அந்த 6 பேரும் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கான வெடிகுண்டுகளை கொண்டு போய் வைத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதாக்களில் உலகம் முழுவதும் ‘‘நெட்வொர்க்’’ ஏற்படுத்தி கடத்தல் தொழில் செய்து வந்தவர் சோட்டாராஜன்.
கடந்த 20 ஆண்டுகளாக இவரை மும்பை போலீசார் தேடி வந்தனர். சமீப காலமாக அவர் சர்வதேச போலீஸ் மூலமாகவும் தீவிரமாக தேடப்பட்டு வந்தார். ஆஸ்திரேலியாவில் பதுங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் இந்தோனேஷியா நாட்டின் பாலிதீவுக்கு வந்தபோது போலீசாரிடம் பிடிபட்டார். டென்பசார் போலீஸ் நிலையத்தில் அவரிடம் பாலித்தீவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதைத் தொடர்ந்து சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைக்க இந்தோனேஷியா முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேசி வருகிறார்கள். இந்த வார இறுதிக்குள் மும்பை போலீசாரும், சி.பி.ஐ. அதிகாரிகளும் இந்தோனேஷியா செல்கிறார்கள். அதன் பிறகு சோட்டா ராஜன் இந்தியா அழைத்து வரப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சோட்டா ராஜனின் உண்மையான பெயர் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி மும்பை செம்பூரில் 1960–ம் ஆண்டு பிறந்த இவர் 10 வயதிலேயே கிரிமினல் குற்றவாளியாக மாறி விட்டார். 1970களில் சினிமா தியேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்பவராக இருந்தார்.  இது  உண்மையான கைதுதான் என்று எப்படி நம்புவது? டீல் வைத்து  சீல் வைத்த விவகாரமாக கூட இருக்கலாம் அவன் வேற  கிட்னி புறப்பிளம் என்கிறான்...மீடியாக்கள் அவன் தாவூத் இப்ராஹீமுக்கு  சிம்ம சொப்பனமாக இருந்தான் என்று ஹீரோ ரேஞ்சுக்கு பலூன் ஊதுராய்ங்க 

அப்போது அவர் ‘நானா’ என்றழைக்கப்பட்டார். அந்த கால கட்டத்தில் திலக் நகரில் விநாயகர் சதுர்த்தி பூஜையை கோலாகலமாக நடத்திய பிரபல ரவுடி ராஜன் நாயரிடம் இவருக்கு நட்பு ஏற்பட்டது. இதனால் ராஜன் நாயர் படா ராஜன் என்றும் ராஜேந்திர சதாசிவ நிகல்ஜி சோட்டா ராஜன் என்றும் அழைக்கப்பட்டனர்.
நாளடைவில் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகி முடன் சோட்டா ராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது. பிறகு இப்ராகிமின் வலது கரமாக சோட்டாராஜன் மாறினார். 1980களில் மும்பை போலீசார் தாவூத் இப்ராகிம் கும்பலை வேட்டையாடியது.
இதனால் தாவூத் இப்ராகிம் துபாய்க்கு வந்து விடுமாறு சோட்டா ராஜனை அழைத்தான். அதன் பேரில் சோட்டாராஜன் துபாய் சென்றார். அதன் பிறகு வெளிநாடுகளில் இருந்தபடி தாவூத் கோஷ்டியில் முக்கிய நபராக செயல்பட்டு வந்தார்.
1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பை தாவூத் இப்ராகிம் நடத்தினான். இதனால் தாவூத் இப்ராகிமுக்கும் சோட்டா ராஜனுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 1996–ல் சோட்டாராஜன் தாவூத் இப்ராகிமிடம் இருந்து பிரிந்து தனி குழு ஒன்றை உருவாக்கினார்.
உலகம் முழுவதும் ஆள் கடத்தல், ஆயுதம் கடத்தல், போதை பொருட்கள் கடத்தல் ஆகியவற்றில் சோட்டா ராஜன் குழு ஈடுபட்டது. இதன் மூலம் சோட்டா ராஜனுக்கு பல நூறு கோடி ரூபாய் கிடைத்தது. இது தவிர இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து உள்பட நாடுகளில் பினாமி பெயர்களில் டிஸ்கோ இரவு விடுதிகளையும் சோட்டா ராஜன் நடத்தி வருகிறார்.
இதற்கிடையே சோட்டா ராஜனை கொல்ல தாவூத் இப்ராகிம் முயற்சி செய்தான். இதை அறிந்த சோட்டா ராஜன் மும்பையில் உள்ள இப்ராகிம் கூட்டாளிகள் 6 பேரை அடுத்தடுத்து கொலை செய்தார். அந்த 6 பேரும் மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கான வெடிகுண்டுகளை கொண்டு போய் வைத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
மொத்தம் 20–க்கும் மேற்பட்ட கொலைகளை சோட்டாராஜன் நடத்தியதாக கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை பிடிக்க சர்வதேச போலீஸ் உதவியை 1994–ல் இந்தியா நாடியது. இதை அறிந்ததும் அவர் பல்வேறு பெயர்களில் நாடு, நாடாக ஓடிக்கொண்டிருந்தார்.
1998–ல் தாய்லாந்து போலீசார் அவரை கைது செய்தனர். ஆனால் போலீஸ் பிடியில் இருந்து அவர் தப்பி ஓடி விட்டார். 2000–ம் ஆண்டு பாங்காங்கில் இருந்த அவரை தாவூத் இப்ராகிம் கோஷ்டியைச் சேர்ந்த சோட்டா ஷகீல் கொல்ல முயன்றான்.
அப்போது நூலிழையில் சோட்டா ராஜன் உயிர் தப்பினார். அதே ஆண்டு அவர் மீது மீண்டும் தாக்குதல் நடந்தது. அப்போதும் அவர் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார்.
2010–ம் ஆண்டு சோட்டா ராஜனுக்கு கிட்னி பாதிக்கப்பட்டது. இதனால் அவர் அடிக்கடி டயலிசிஸ் சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக தங்கியதாக கூறப்படுகிறது.
உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அவர் நிழல் உலக தாதா வேலையை மட்டும் கைவிடவில்லை. 2011–ல் பத்திரிகையாளர் டே என்பவரை தன் ஆட்கள் மூலம் கொலை செய்தார். 2011–க்கு பிறகு சோட்டா ராஜன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
சோட்டா ராஜன் மீது மொத்தம் 68 பல்வேறு வழக்குகள் உள்ளன. நேபாளம் நாட்டில் அவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் மும்பை மாநகர போலீசில்தான் பதிவாகி உள்ளது.
சோட்டா ராஜனுக்கு சுஜாதா என்ற மனைவியும் 3 மகள்களும் உள்ளனர். தற்போது 50 வயதாகும் சுஜாதா மும்பையில் சில நிறுவனங்களை நடத்தி வருகிறார். 2006–ல் அவர் பண மோசடி செய்ததாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தார்.
அந்த வழக்கில் அவர் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். சுஜாதா மீது மேலும் சில கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை பெறக்கூடும் என்று தெரிகிறது.
சோட்டா ராஜன் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டாலும் தனது 3 மகள்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார். அவரது மூத்த மகள் இங்கிலாந்தில் எம்.பி.ஏ. படித்து வருகிறார்.
அவரது இரண்டாவது மகள் என்ஜினீயராக இருக்கிறார். சோட்டா ராஜனுடன் பிறந்த சகோதரர்கள் தற்போதும் செம்பூரில் கட்டுமானத் தொழில் செய்து வருகிறார்கள்.
மும்பை மக்கள் சோட்டா ராஜனை ‘‘தேசப்பற்று மிக்க நிழல் உலக தாதா’’ என்று அழைக்கிறார்கள். ஏனெனில் மும்பையில் இவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் எந்த ஒரு கிரிமினல் சதி செயல்களில் ஈடுபட்டதில்லையாம். அதே சமயத்தில் மும்பையில் அமைதியை சீர்குலைத்தவர்களை இவர் தீர்த்து கட்டியதாக சொல்கிறார்கள்.
சோட்டா ராஜனின் இந்த வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு இந்தியில் கம்பெனி, வாஸ்தவ என்று இரு சினிமா படங்கள் தயாரிக்கப்பட்டன. இதில் கம்பெனி படத்தில் சோட்டா ராஜன் போல விவேக் ஓபராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.
வாஸ்தவ படத்தில் சோட்டா ராஜன் மாதிரி சஞ்சய் தத் நடித்தார். சில சினிமா படங்களுக்கு சோட்டா ராஜன் பைனான்ஸ் செய்ததாக கூறப்படுவதுண்டு.
சோட்டா ராஜனின் குழுவில் இருந்தவர்களில் பலர் இப்போது தனி தனி குழுக்களை உருவாக்கி உலகின் பல பகுதிகளிலும் கடத்தல் தொழில் செய்து வருகிறார்கள். அவர்கள் கொடுத்த ரகசிய தகவல்கள்தான் சோட்டாராஜன் பிடிபட முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் சோட்டா ராஜன் நடத்தி வந்த கடத்தல் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துள்ளது.
அது மட்டுமின்றி மும்பையில் மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் 350 பேரின் மரணத்துக்கு விடை கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  maalaimalar.com

கருத்துகள் இல்லை: