217 பயணிகள், 7 ஊழியர்களுடன் சென்ற ரஷ்ய விமானம் சினாயில் விபத்துக்குள்ளானதாக எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். எகிப்தின் ஷாம் அல் - ஷேக் நகரிலிருந்து ரஷ்யாவின் செயின்ட் பிட்டர்ஸ்பெர்கிர்க்கு சென்றபோது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் ரஷிய சுற்றுலா பயணிகள் என தெரிய வருகின்றன.
முதலில் அந்த விமானம், ஷினாய் தீபகற்ப பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. அதனையடுத்து, துருக்கி விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட அந்த விமானம், பத்திரமாக இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று எகிப்து நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.நக்கீரன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக