புதன், 28 அக்டோபர், 2015

வாசன் கட்சிக்கு 8 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்.... அ.தி.மு.க.வின் தாராளம்..

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அ.தி.மு.க. தொடங்கியுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் 8 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட் மட்டுமே கொடுக்க அ.தி.மு.க. முன்வந்திருப்பது த.மா.கா.வை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி வியூகங்களில் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளன. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் 234 தொகுதிகளையும் கைப்பற்றுவதற்கான வியூகத்துடன் களமிறங்கியுள்ளது.
இதற்கு ஏதுவாக சில சிறிய கட்சிகளை கூட்டணியில் இணைத்து இரட்டை இலை சின்னத்திலேயே நிற்க வைப்பது என்பது அ.தி.மு.க.வின் வியூகம். இதன் முதல் கட்டமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது   வாசனுக்கு எப்படியாவது  பாராளுமன்றம்  போகவேண்டும் அம்புடுதே....மத்தபடி எத்தனை  எம் எல் ஏக்கள்  வந்தாலும்  அத்தனையும் அங்கே  ஓடிடுவாய்ங்க

30 சீட் தாங்க.. இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் பிரதிநிதி ஞானதேசிகனுடன் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சுவார்த்தை நடத்தினார். அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு 30 இடங்கள் வேண்டும் என்று ஒரே போடாக போட்டார் ஞானதேசிகன்.
5 தான் தர முடியும் இதனை அசட்டு புன்னகையுடன் ரசித்த நத்தம் விஸ்வநாதனோ, உங்களுக்கு 5 தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா சீட் மட்டும்தான் என 'அம்மா' கூறியுள்ளார் என பதில் தர, ஞானதேசிகன் முகம் இருண்டுபோனாதாம். இதனைத் தொடர்ந்து ஜி.கே.வாசனிடம் இந்த தகவலை நேரில் சொல்லியிருக்கிறார் ஞானதேசிகன்
8 ப்ளஷ் 1 ராஜ்யசபா சீட் சில நாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் ஞானதேசிகனை அழைத்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அதிகபட்சமாக 8 தொகுதிகளுடன் 1 ராஜ்யசபா சீட் என்ற பார்முலாவுக்கு ஒப்புக் கொண்டால் கூட்டணிக்கு வரலாம் என கறாராக சொல்லியிருக்கிறார். அத்துடன் 8 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டதாம்
வாசன் ஆறுதல் 30 தொகுதிகள் கேட்டு 8 தானா? என ஞானதேசிகன் ஆதங்கப்பட்டாராம்.. ஆனால் ஜி.கே.வாசனைப் பொறுத்தவரையில் நமக்கு ஒரு ராஜ்யசபா சீட் கிடைப்பதை உறுதி செய்துவிட்டோம்; 8 தொகுதிகளைப் பெற்று கட்சியினரை சமாளித்துவிடுவோம் என்ற நம்பிக்கையோடு ஆறுதல் படலத்தை தொடங்கியுள்ளனராம். அதே நேரத்தில் கூட்டணிக்கு வராவிட்டால் தமிழ் மாநில காங்கிரஸ் 'மூத்த தலைகள்' சிலர் அ.தி.மு.க.வுக்கு தாவவும் கூடும் என நெருக்கடியும் வாசனுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read more at:://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: