காத்மாண்டு,
நேபாளத்தில்
ஆளும் சிபிஎன்.யுஎம்.எல். கட்சியை சேர்ந்த வித்யா தேவி பந்தாரி(54)
அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நேபாள காங்கிரஸ்
கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் கவுல் பகதுர் குருங்கை 100 வாக்குகள்
விதியாசத்தில் தேவி பந்தாரி வீழ்த்தி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார்.கடந்த 2008 ஆம் ஆண்டு நேபாளம் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் அதிபராக தேர்வு செய்யப்பட்டு பதவி வகிக்கும் ராம்பரன் யாதவை தொடர்ந்து அந்நாட்டின் முதல் பெண் அதிபராக வித்யா தேவி பந்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி புதிய அரசியல் சாசன சட்டம் பிரகனப்படுத்தப்பட்டதையடுத்து பாராளுமன்ற கூட்டம் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் புதிய அதிபரை தேர்வு செய்யவேண்டி இருந்தது. அதன்படி வித்யா தேவி பந்தாரி முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாராளுமன்ற சபாநாயகர் ஒன்சாரி கார்தி இந்த அறிவிப்பை வெளியிட்டார் dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக