Chhota Rajan assets worth over Rs 4000 crore, claim Mumbai police சிரித்துக்கொண்டு போஸ் கொடுக்கிறான், 5 வருரடம் கழித்து, தாவுத் தாதாவை எதிர்த்து போர் புரிந்தவர்
என்று மும்பைல இவனுக்கு சிலை வைத்தாலும் ஆச்சரிபடுவதற்கில்லை.......
தாவூத் இப்ராகிம்கும்பல் உட்பட, எந்த எதிரி கும்பலையும் பார்த்து, நான் பயப்படவில்லை' என, இந்தோனேஷியாவில் பிடிபட்ட, மும்பை தாதா
சோட்டா ராஜன் கூறியுள்ளான் . இது ஒரு குவாலிபிகேசன் ? மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் கொலைகள் கடத்தல்கள் கப்பம் பறித்தல் போன்றவற்ரில் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியாக இருந்தவன் சோட்டா ராஜன். கருத்து வேறுபாடு காரணமாக, தாவூத் கும்பலில் இருந்து பிரிந்து, தனியாக, ஆள், ஆயுதம், போதை மருந்து கடத்தலில், சோட்டா ராஜன் ஈடுபட்டான். இந்தியாவில் மட்டும், அவன் மீது, 20 கொலை வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப் பட்டதால், 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தான். சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் இருந்து, இந்தோனேஷியாவுக்கு சென்றபோது, அங்குள்ள சுற்றுலா தலமான பாலியில், சர்வதேச போலீசார் உதவியுடன், சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டான். இவன் ராஜ்யசபா எம்பியானால்கூட ஆச்சரியம் இல்லை. விஜய் மல்லையா கூட அங்குதாய்ன்..
அவனிடம் நடத்திய விசாரணை குறித்து, பாலி போலீஸ் கமிஷனர் ரெயன்கார்ட் நைன் கோலன் கூறியதாவது:
ஆஸ்திரேலிய போலீசாரும், சர்வதேச போலீசாரும் அளித்த தகவலின் அடிப்படையில், பாலி விமான நிலையத்தில், சோட்டா ராஜனை கைது செய்தோம். அப்போது, சோட்டா ராஜன் மிகவும் பதற்றத்துடன் காணப்பட்டான்.
தாவூத் இப்ராகிம் உள்ளிட்ட எதிரி கும்பல்களால், சோட்டா ராஜனுக்கு ஆபத்து இருப்பதை அறிந்துள்ளோம். இதனால், அவனுக்கு அதிகபட்சமாக, கமாண்டோ படையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். 'தாவூத் உள்ளிட்ட எந்த எதிரி கும்பலையும் பார்த்து, எனக்கு பயமில்லை' என, சோட்டா ராஜன் கூறினான். சிறுநீரக பாதிப்பு உள்ளதாகவும், அதனால், தன்னை விடுவிக்கும்படியும், அவன் கூறினான்.
மருத்துவப் பரிசோதனையில், அவன் ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் வரவுள்ளனர். அவர்களின் விசாரணைக்கு பின், சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சோட்டா ராஜனிடம் போலி பாஸ்போர்ட்
இந்தோனேஷியாவில் கைதான சோட்டா ராஜனிடம், இருந்த பாஸ்போர்ட்டில், மோகன் குமார், மாண்டியா என்று குறிப்பிட்டிருந்தது.இந்த நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்ட எஸ்.பி., பூஷண் போரசே கூறியதாவது:சோட்டா ராஜனிடம் இருந்து இந்தோனேஷியா போலீசார் கைப்பற்றிய பாஸ்போர்ட், 2008ல் தரப்பட்டது. 2008ல் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாஸ்போர்ட்டு களையும் பரிசீலித்து விட்டோம்.மோகன் குமார் என்ற பெயரில், எந்த நபருக்கும் பாஸ்போர்ட் தரப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -தினமலர்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக