திங்கள், 6 ஜூலை, 2015

திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: ""திருமணம் ஆகாத தாய், குழந்தைக்கு பாதுகாவலராக இருக்கலாம்'' என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. டில்லியில் கெஜட்டட் அதிகாரியாக இருப்பவர் அந்தப் பெண் (பெயர் வெளியிடப்படவில்லை). இவருக்கும் இன்னொரு ஆணுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் இரண்டு மாதங்கள் ஒன்றாக குடும்பம் நடத்தினர். அதற்குள் அப்பெண் கர்ப்பம் ஆனார். இரண்டு மாதங்கள் கழித்து, அந்த ஆண் அந்த பெண்ணை பிரிந்து சென்று விட்டார். அப்பெண்ணுக்கு குழந்தையும் பிறந்தது.உரிமை வேண்டும்: திருமணம் ஆகாமல் பிறந்த குழந்தைக்கு சட்டப்பூர்வ பாதுகாவராக இருக்க விரும்பிய அப்பெண், அதற்கு அனுமதி கேட்டு டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


மனுவை விசாரித்த ஐகோர்ட், "திருமணம் ஆகாத ஒரு பெண், குழந்தைக்கு சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்க முடியாது. அக்குழந்தையின் தந்தை யார் என்றும் தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டது.


சுப்ரீம் கோர்ட் உத்தரவு: இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் மேல்முறையீடு செய்தார் அந்த பெண். மனுவை விசாரித்த நீதிபதி விக்ரம்ஜித் சென், ""குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொள்ளாமல் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. தேவைப்பட்டால் தந்தை யார் என்றே தெரிவிக்காமல், ஒரு குழந்தைக்கு திருமணம் ஆகாத ஒரு பெண், சட்டப்பூர்வ பாதுகாவலராக இருக்கலாம்'' என்றார். dinamalar.com

கருத்துகள் இல்லை: