கிரீஸ் நாட்டின் நெருக்கடி என்று ஊடகங்கள் தெரிந்தே தவறாகச் சொல்கின்றன. உண்மையில் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளான சர்வதேச நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஏவிவிட்ட அடக்குமுறை இது. உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏழை நாடுகளை மீட்பதாக சொல்லி நிபந்தனைகள் பேரில் கடன் கொடுத்து ஒட்டச் சுரண்டி திவாலாக்கியதன் சமீபத்திய சான்று கிரீஸ்.
இவர்களிடம் வாங்கிய கடனில் சுமார் 10,000 கோடி ரூபாயை ஜூன் 30-க்குள் கட்ட கிரீஸால் முடியவில்லை. எனவே கூடுதலான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அது ஊதியம், இதர உரிமைகளை ரத்து செய்வதாக அமையும். ஏற்கனவே கிரேக்க மக்களின் நலத்திட்டங்கள் பல ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் சர்வதேச நிதியம் மட்டும் கிரீஸிலிருந்து வட்டியாக மட்டும் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறது.
இந்நிலையில் இந்த அநீதியான, கொடூரமான நிபந்தனைகளை ஏற்பதா, மறுப்பதா என்று நாளை 05-07-2015 கிரீஸில் வாக்கெடுப்பு நடக்கிறது.
ஏற்கமாட்டோம் என்று மக்கள் வாக்களித்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது, யூரோவை பயன்படுத்த முடியாது என்று போகும், ஆதலால் ஒழுங்கு மரியாதையாக ஏற்போம், வாக்களிப்போமென முதலாளித்துவ ஆதரவு சக்திகள் மிரட்டுகின்றன. ஒருவேளை ஏற்க மாட்டோம் என முடிவு வந்தால் அது உலகளாவிய கந்து வட்டிக்காரர்களை எதிர்த்த மாபெரும் கலகத்தின் துவக்கமாக இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியோறுவோம், NO வாக்களிப்போம் என மக்கள் ஏதென்ஸ் நகரில் போராடும் படங்கள்…..
கிரீஸ் வாக்கெடுப்பு: மக்கள் வெற்றி – முதலாளிகள் தோல்வி! ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய கந்து வட்டிக்காரர்களின் நிர்ப்பந்தத்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள், கிரீஸ் மக்கள். கிரீஸுக்கு ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி எனும் அடக்குமுறையின் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சுருக்கமான அறிமுகத்தை முந்தைய பதிவில் காண்க. நேற்று 05-07-2015 ஞாயிற்றுக் கிழமை நடந்த வாக்கெடுப்பின் முடிவு வெளிவந்து விட்டது. இதன்படி 61.31% மக்கள் சர்வதேச நிதியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். இந்த சிக்கன நடவடிக்கையை ஏற்பவர்கள் “ஆம்” என்றும், ஏற்காதவர்கள் “இல்லை” என்றும் வாக்களிக்க வேண்டும். அதன்படி ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவு “இல்லை” என்று கிரீஸ் மக்கள் உறுதியாக வாக்களித்திருக்கிறார்கள். இனி கிரீஸ் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, யூரோ நாணயத்தை பயன்படுத்த முடியாமலும் போகும் என்பதால் அமெரிக்கா தலைமையிலான வல்லரசு நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. கிரீஸ் முடிவுகள் வெளியான உடன் யூரோவின் மதிப்பு சரிந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அதிபர்கள் இன்று உடன் கூடி இனி என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பார்களாம். இந்த முடிவு ஒரு துவக்கம். இதை ஏகாதிபத்தியங்கள் அப்படியே எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பிடி இறுகும். கிரேக்கத்தின் அலெக்சிஸ் டிசிப்ரஸ் இனி பன்னாட்டு நிதி நிறுவனங்களோடு சமரசமாக பேசி கடன் பெறுவது, நெருக்கடியை தீர்ப்பது என்பதெல்லாம் கடினம். அதே நேரம் இந்த மக்கள் ஆதரவை வைத்துக் கொண்டு சுய பொருளாதாரத்தை ஊக்குவித்து, ஒரு போராட்டப் பாதையை துவக்கினால் அது இந்த எதிர்ப்பை களத்தில் சாதிப்பதற்கு உதவும். வாழ்த்துவோம், கிரேக்கத்தின் மக்களை! வினவு.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக