நல்லது. ‘பாலசந்தருக்கு சிலை வைக்க வேண்டும். தெருவுக்கு அவர் பெயர் வைக்க
வேண்டும்’ என்று அவரைப் பெரிய தியாகிபோல் சித்தரித்துக் கோரிக்கைகள்
எழுந்திருக்கின்றன. முதலில் பாலசந்தருக்கு ‘பாலசந்தர்’ என்ற பெயரை வைங்க.
‘இயக்குர் சிகரம்’, ‘காலத்தை வென்ற கலைஞன்’ இன்னும் பல பெயர்களால் தான்
அவர் குறிக்கப்படுகிறார்.
என்ன பெரிய தியாகம் பண்ணார்? ஒரு வைதிகப் பார்ப்பனரை விட மிக மோசமான பார்ப்பன உணர்வு கொண்டவராகதான் தன் படங்களை எடுத்ததார். இடஒதுக்கீடு எதிர்ப்பு, மதமாற்ற கண்டிப்பு, தமிழின் முதல் முழு நீள முஸ்லீம் எதிர்ப்புப் படமான ‘ரோஜா’ தயாரிப்பு.. இதுக்கெல்லாமா சிலை வைப்பாங்க?
தன்னைத் திமுக அல்லது அண்ணாதுரையின் ஆதரவாளராகச் சில படங்களில் சித்தரித்துக் கொண்டதெல்லாம், பெரியார் எதிர்ப்பின் பின்னணிதான். அண்ணாவை உயர்த்துவதே பெரியாரை மட்டம் தட்டுவதற்காகதான்.
பல பார்ப்பன எழுத்தாளர்கள், பத்திரிகயைாளர்கள் அண்ணாவை பாராட்டி விட்டு, பெரியாரை மட்டம் தட்டி எழுதியிருக்கிறார்கள்.
தினமணி கதிரின் ஆசிரியராகச் சா. விஸ்வநாதன் என்கிற சாவி இருந்தபோது, திமுகவின் மிகப் பெரிய ஆதரவாளரைப்போல் அண்ணாவின் வாழ்க்கை வரலாறை ‘அண்ணாவின் கதை’ என்ற தலைப்பில் வெளியிட்டார். அதை எழுதியவர் நவீனன் என்ற புனைப் பெயரில் இருந்த முத்துசாமி. அவரும் சாவி யை போலவே ஒரு பார்ப்பனர். அதன் பிறகு சினிமா எக்ஸ்பிரஸ் இதழின் முதல் ஆசிரியராகவும் இருந்தார் நவீனன்.
அண்ணாவின் கதையில் அண்ணாவை பெரியாரை விடப் பெரிய தலைவராகவும், பெரியார் பல முட்டாள் தனமான தவறுகளைச் செய்ததாகவும் அதை அண்ணா சுட்டிக் காட்டியதாகவும் பிறகு பெரியாரை கண்டித்துத் தனிக் கட்சி துவங்கியதாகவும் எழுதினார் நவீனன். (2000 ஆண்டுகாலப் பழைய பார்ப்பனியக் கண்ணோட்டம் கொண்டவருக்குப் பெயர் நவீனன்)
இதுபோன்ற அண்ணா ஆதரவு பாணி தான் பாலசந்தரிடமும் இருந்தது. அது மட்டுமல்ல பாலசந்தரை வைத்துப் படம் தயாரித்த அரங்கண்ணல் ஒரு திமுகக் காரர் என்பதால், அண்ணா பற்றிய காட்சிகளைத் தன் படங்களில் வைப்பதற்குக் கட்டாயக் காரணம்.
அண்ணாவின் ஆதரவாளராகச் சித்தரித்துக் கொண்ட பாலசந்தர், தன் படங்களில் பெரியாரின் கடவுள் மறுப்பு, ஜாதி ஒழிப்புக் கருத்துக்களை மிகக் கடுமையாகக் கண்டித்தும், கேலி செய்தும் இருக்கிறார். (அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர்)
இந்த அண்ணா ஆதராவளரின் பெரியார் மீதான காழ்ப்புணரச்சி எவ்வளவு இழிவானதாக இருந்தது என்பதற்கு ‘கோல்மால்’ என்ற பெயரில் இந்தியில் வெளியான படத்தை, தமிழில் ‘தில்லு முல்லு’ வாக்கி அவர் கொண்டு வந்த படத்தின் ஒரு பாடல் காட்சியே சாட்சி.
‘தங்கங்களே தம்பிகளே…’ என்ற பாடல் காட்சிகளில், ரஜினி; எம்.ஜி.ஆர், சிவாஜி போல் வேடமிட்டு பாடுவார். இப்படிக் கதாநாயகர்கள் வரிசையில் திடிரென்று நடிகவேள் எம்.ஆர்.ராதா போல் வேடமிட்டும் வருவார்.
இதை மேலோட்டமாகப் பார்த்தால், பெரியாரின் சீடரான எம்.ஆர். ராதாவை பெரிய கதாநாயகர்கள் வரிசையில் வைத்துக் காட்டியிருக்கிறார், பராவாயில்லையே பாலசந்தர் என்று பாராட்டி அவருக்குச் சமுகநீதி இயக்குநர் என்ற பட்டமும் கொடுத்துவிடலாம்.
ஆனால், அவர் எம்.ஆர். ராதாவை பயன்படுத்தியதே பெரியாரை இழிவாகக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான்.
ரத்தக்கண்ணீர் எம்.ஆர். ராதாவாகக் காட்சி படுத்திருப்பார். அதில் வெளிநாட்டில் இருந்து வந்த டிப்-டாப் உடையணிந்த எம்.ஆர். ராதாவாக அல்ல. குஷ்டம் பிடித்த எம்.ஆர். ராதாவாக.
ஆனால் எம்.ஜி.ஆராக ‘மதுரைவீரன் சொல்லுறதை கேளுங்க..’ என்ற வரியை காட்சிபடுத்தியபோது, வரிக்குப் பொருத்தமில்லாமல் ‘வேட்டைக்காரன்’ பட உடையில் ரஜினியை காட்சிபடுத்தியிருப்பார்.
எம்.ஆர். ராதாவை மட்டும், ‘நமது அய்யா சொன்னபடி பகுத்தறிவு பாதையில செல்லுங்க..’ என்ற வரியை, குஷ்டம் பிடித்த கைகளோடும், முகபாவனையோடும் குளோசப்பில் காட்டி முடிப்பார்.
‘பெரியாரின் பகுத்தறிவு பாதை குஷ்டம் பிடித்தது’ என்ற குறியீடோடு. எவ்வளவு வன்மம். எச். ராஜா வை விட இழிவாகப் பெரியாரை அடையாளப்படுத்தியவர் பாலசந்தர்.
இவருக்குத்தான் சிலை வைக்கணுமாம். இதற்காகவே வைத்தாலும் வைப்பார்கள்.
அதற்குப் பெரியாரை ஆதரிப்பவர்களாகச் சொல்லிக் கொள்பவர்களும் பீடம் அமைக்க செங்கல் எடுத்துக் கொடுப்பார்கள்.mathimaran.wordpress.com

3 கருத்துகள்:
மிகச் சரியான அலசல் .ம ன ம் நிறைந்த பாராட்டுக்கள் !
MIGA SARIYAGA SONNINGA,
thank you very much for your great comments
கருத்துரையிடுக