செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பாகிஸ்தான் பாடகர்களின் விசாவை இழுத்தடிக்கும் அதிகாரிகள் Ustad Ghulam Fariduddin Ayaz Al-Hussaini Qawwal is a Pakistani Qawwal.


லக்னோ:பாகிஸ்தானை சேர்ந்த பிரபல சூபி பாடகர்களுக்கு இந்தியா வர மத்திய அரசு விசா மறுத்துள்ளது.பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்த பிரபல சூபி பாடகர்கள் பரிதுதீன் அயாஸ், அபு முகமது இருவரும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் உலகின் பல நாடுகளுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.நூற்றாண்டுகளுக்கு முந்தைய இந்தியாவின் புகழ் பெற்ற இந்துஸ்தானி மற்றும் சூபி பாடகரான அமிர் குஸ்ருவின் நேரடி சீடர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இந்த சூழலில் உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவில் சூபி சகோதரர்களின் சீடர்கள் கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தனர்.


ஆனால் இந்தியா வருவதற்கு விசாவுக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்களாகியும் விசா வழங்கப்படவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விசா வழங்குவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்ய வேண்டும். ராஜ்நாத் சிங் பிசியாக இருப்பதால் இதுகுறித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்துகளை பெற முடியவில்லை. இதுகுறித்து கராச்சியில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஜானேஷ் கூறுகையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் விதிமுறைகளின் கீழ்தான் விசா வழங்கப்படும். இன்னும் ஓரிரு தினங்களில் விசா வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

இதுகுறித்து பாடகர்கள் கூறுகையில், கலை நிகழ்ச்சிக்காக விசா கேட்டு பல மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்து விட்டோம். இந்திய தூதரகத்தில் இதுகுறித்து கேட்ட போது, இதோ வந்து விடும், இன்று, நாளை என இழுத்தடிக்கின்றனர். விசாவும் தரவில்லை. அதற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மாதவி கக்ரேஜா கூறுகையில், மத்திய அரசின் இந்த போக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. விசா தாமதம் காரணமாக இதுவரை இரண்டு முறை நிகழ்ச்சியை ரத்து செய்து தள்ளி வைத்துள்ளோம் என்று வருத்தத்துடன் தெரிவித்தார் - See more attamilmurasu.orgf

கருத்துகள் இல்லை: