சனி, 6 செப்டம்பர், 2014

இனி மூளை டூ மூளை எஸ்.எம்.எஸ்: டெலிபதியில் சாதனை

டெல்லி: இப்பத்தான் உன் கூட பேச நினைச்சேன் நீ போன் பண்றே என்று நண்பர்களுக்குள் அடிக்கடி கூறுவார்கள். நம்முடைய எண்ணங்கள் அலைவடிவில் பரவி அது நாம் யாரைப் பற்றி நினைக்கிறோமே அவர்களைச் சென்றடைகிறது. இதனை டெலிபதி என்றும் கூறுவார்கள். காதலர்கள், தம்பதியர்கள் கூட நான் நினைச்சேன் நீ சொல்லிட்ட... என்னுடைய மனசுல இருக்கிறதை நீ புரிஞ்சிக்கிட்ட என்பார்கள். அதுபோன்ற ஒரு டெலிபதியை இப்போது அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளனர். இவ்வரிகளுக்கு ஏற்ப ஒருவர் மனதில் நினைக்கும் செய்தி ஒன்றை டெலிபதி மூலம் ஆயிரம் மைல்களுக்கு மேல் உள்ள ஒருவருக்கு பரிமாற முடியும் என்பதை சோதனை முயற்சியாக நாடு விட்டு நாடு அனுப்பி விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். டெலிபதி தகவல் சமீபத்தில் இந்தியாவிலிருக்கும் ஒருவருக்கும், பிரான்ஸ் நாட்டில் இருப்பவருக்கும் இடையே புதிய தொழில்நுட்பம் மூலம் செய்தி அனுப்பி சோதனை செய்து பார்க்கப்பட்டது. மூளை டூ மூளை செய்தி டெலிபதி மூலம் ஒரு மனிதன் மூளையிலிருந்து இன்னொருவரின் மூளைக்கு செய்தி அனுப்பியது உலகில் இதுதான் முதல் முறை. மின் அலைகளாக சக்தி வாய்ந்த சாதனம் ஒன்றின் உதவியால் ஒருவர் மனதில் நினைக்கும் செய்திகள் மின் அலைகள் மூலம் பைனரியாக மாற்றப்பட்டு அனுப்பப்டுகின்றன. எழுத்தாக மாற்றம் இந்த செய்தி பல ஆயிரம் மைல்கள் தொலைவில் உள்ள மற்றொருவரின் மூளையில் சென்றடைந்து பின்னர் அந்த பைனரி செய்தி எழுத்து வடிவில் கம்ப்யூட்டர் உதவியால் மாற்றப்படுகிறது. தகவல் பரிமாற்றம் இனி வரும் காலங்களில் தற்போது கம்ப்யூட்டர் அல்லது செல்போன் மூலம் வீடியோ சாட்டிங்கில் பேசிக்கொள்வது போல மனித மூளையுடன் நேரடியாக தகவல்களை பரிமாறிக்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இது குறித்து ஹாவார்டு பல்கலைகழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமில்லை மந்திரமில்லை நுட்பமான தொழில்நுட்பத்தை இதற்கு பயன்படுத்துகிறோம் இது ஒரு தொழில்நுட்பம்தான் மந்திரமல்ல என்று இது குறித்து ஆராய்சியாளர் குலியோ ருபினி கூறியுள்ளார். அப்போ இனி பைசா செலவில்லாமல் எஸ்.எம்.எஸ் அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை

tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: