சென்னை: திமுகவில் ஏற்பட்ட பிரச்சனையால்தான் அதிமுகவை எம்.ஜி.ஆர்.
தொடங்க நேரிட்டது என்று சொல்லப்படும் சம்பவங்களுக்கு மாறாக நன்கு
திட்டமிட்டே மக்களின் நாடித்துடிப்பை எல்லாம் அறிந்த பின்னரே தான்
தனிக்கட்சி தொடங்கினேன் என்று எம்.ஜி.ஆரே. சொன்ன ரகசியம் இப்போது வெளியாகி
உள்ளது.
நக்கீரன் வாரம் இருமுறை இதழில் சினிமா சீக்ரெட் என்ற பகுதியில் சினிமா
கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் தொடரை எழுதி வருகிறார்.
இத்தொடரில் தேவர் பிலிம்ஸ் தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன ரகசியம் என்று
கலைஞானம் எழுதியிருப்பதாவது:
திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல் செலவுக்கு... எம்.ஜி.ஆருக்கு
உதவும் விதமாக எம்.ஜி.ஆரைச் சந்தித்து பணத்தைக் கொடுத்தார் தேவர்.
அண்ணே... இந்தப் பணத்தை நீங்களே வச்சுக்கங்க. தேவையான பணம் எனக்கு
கிடைச்சிடுச்சு. கே.ஆர்.விஜயாவின் கணவர் வேலாயுதம் ஒரு தொகை கொடுத்தார்.
ஜேப்பியார் ஒரு தொகை கொடுத்தார். அட டா என்னே ஒரு தேச பக்தி ?
எனக்கு நெருக்கமான சிலரும் பணம் கொடுத் திருக்காங்க. இப்போது இந்தப் பணம் தேவைப்படாதுண்ணே என எம்.ஜி.ஆர். சொல்ல... எம்.ஜி.ஆர். சொன்ன முக்கிய விஷயம்! அவங்கள்லாம் உங்களுக்கு தேர்தல் செலவுக்கு உதவும்போது, நான் உங்களுக்குச் செய்யலேன்னா நன்றிகெட்ட செயலாயிடும். கண்டிப்பா இந்த பணத்தை ஏத்துக்கணும்'''எனச் சொல்லி கொடுத்துவிட்டு வந்ததாக என்னிடம் சொன்னார் தேவர். ஒவ்வொரு நாளும் பூஜையறையில் "முருகா... எப்படியாவது நீ ஜனங்க மனசுல புகுந்து, எம்.ஜி.ஆருக்கு ஓட்டுப் போட வை. நான் உன் உண்டியல்ல நோட்டப் போடுறேன். நீ பாராமுகமா இருந்தா மருதமலைக்கு வந்து உன் தலையில வேட்டப் போடுவேன்'''என லட்சார்ச்சனை போல் "ஓட்டு -நோட்டு -வேட்டு''என இதையே சொல்லி பூஜை செய்து வந்தார் தேவர். எம்.ஜி.ஆர். சொன்ன முக்கிய விஷயம்! இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததும், மருதமலை சென்ற தேவர் உண்டியலில் நோட்டுக் கட்டுகளைப் போட்டுவிட்டு, முருகனுக்கு நன்றி சொல்லி அபிஷேகமும் செய்துவிட்டு பிரசாதத்துடன் சென்னை திரும்பினார். முதல் வேலையாக எம்.ஜி.ஆரைப் 'பார்த்து "நீங்க ஜெயிக்கணும்னு முருகனை வேண்டிக்கிட்டேன். அவனும் ஜெயிக்க வச்சிட்டான்''' எனச் சொல்லி பிரசாதத்தைக் கொடுத்திருக்கிறார் தேவர். அதை வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர்., தேவரை தனியறைக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசியிருக்கிறார். அப்போது தனது அரசியல் குறித்து தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்னதை, தேவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

அண்ணே... ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள்
என்மேல அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா
"ஏழைகளுக்கு நல்லதச் செய்யணும்'னு நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம்
மக்கள் நம்புறாங்க.
"எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாரு'னு நினைக்கிறாங்க.
அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது
செஞ்சாகணும். அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது.
"இதுக்கு என்ன செய்யலாம்?'னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத்
தொடங்கினால்தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல்
ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன். இருந்தாலும்...
அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை
மேலும் உறுதி செய்துக் கிறதுக்காக ஒரு முடிவெடுத்தேன்.
தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன அந்த ரகசியம்...
அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற
படம் ஒண்ணைப் பார்த்தேன். அது அரசியல் கதை. என்.டி.ஆர். நகராட்சி
தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை. அந்தக் கதையை வாங்கி "நாமளே
நடிக்கலாமே'னு முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச்
சொன்னேன். "அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார்.
"நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்'னு நான் சொன்னேன். அதற்கு ரெட்டியார்
சம்மதிச்சார்.
இரவு பகலா விடாம ஷூட்டிங் நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும்
பண்ணியாச்சு. "ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா
தியேட்டருக்குப் போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம்.
நாம தியேட்டருக்கு வர்ற விஷயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு
சொன்னேன்.
திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம்.
தியேட்டரின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம்
பார்த்தோம்.
நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... ‘"வாங்கய்யா
வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில்,
கைதட்டல், ஆரவாரம்னு தியேட்டரே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள்
அமர்க்களப்படுத்தினாங்க. கரகோஷம் நிற்கவே இல்லை.
அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல
உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு அரசியலில் நேரத்தை செலவழிப்பதுன்னு அப்ப
முடிவு பண்ணினேன். ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச்
சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக்
கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை
கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன்.
அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு
நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்...
இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன். ஜெயிச்சிட்டேன்''
-இப்படி, தான் தனிக்கட்சி துவங்கியதன் காரணங்களை தேவரிடம்
சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர்.
இவ்வாறு நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார். இதில் கலைஞானம் சொல்லாத இன்னுமொரு செய்தியும் உண்டு, அந்நிய செலாவணி மோசடி குற்ற சாட்டில் இருந்தும் விடுபட இந்திரா காங்கிரசை அனுசரிக்குமாறு மோகன் குமாரமங்கலமும் ஆலோசனை வழங்கினார்கள். அதையும் எம்ஜியார் ஏற்றார் என்பதே முழு உண்மை tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக