டோக்கியோ,
இந்தியா கடந்த 1998–ம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து,
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்துஸ்தான் விமான தொழிற்சாலை
(எச்.ஏ.எல்.) உள்ளிட்ட பாதுகாப்பு துறை தொடர்பான 10 இந்திய நிறுவனங்களுக்கு
ஜப்பான் தடை விதித்தது. அதில் இந்துஸ்தான் விமான தொழிற்சாலை உள்ளிட்ட 6
நிறுவனங்கள் மீதான தடையை ஜப்பான் நேற்று நீக்கியது.
இந்த தகவலை நேற்று டோக்கியோவில், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயுடன் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாதுகாப்பு துறையில் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக நேற்று இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதால், மேற்கண்ட 6 இந்திய நிறுவனங்களும் தொழில்நுட்ப பரிமாற்றங்கள் உள்ளிட்ட விஷயங்களில் ஜப்பான் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.
என்றாலும், இன்னும் 4 இந்திய நிறுவனங்கள் ஜப்பானின் தடை பட்டியலில் உள்ளன. daillythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக