ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

கேன்சர் திசுக்களைக் கண்டறியும் பயிற்சி நாய்கள்

பிலடெல்பியா, ஆரம்ப கட்ட கேன்சர் திசுக்களை கண்டறியும் முயற்சியில் கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து உயர்வகை நாய்களின் மோப்ப சக்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வகை நாய்கள் தங்களது சிறப்புத் தன்மையினால் சிறுநீர்ப்பை புற்றுநோய், மெலனோமா, நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் உட்பட அனைத்து வகைகளையும் கண்டறிகின்றன.< ஆனால் மருத்துவப் பயன்பாடுகளில் இவை ஏற்றுக் கொள்ளப்படுவது குறித்து விஞ்ஞானிகள் இன்னமும் பேச்சுவார்த்தைகளிலேயே உள்ளனர். நீரிழிவு நோயாளிகளின் அவசரத்திற்கும், வலிப்பு நோயாளிகளின் அவசர நிலை குறித்து வழிப்போக்கர்களுக்கு எச்சரிக்கை அளிக்கும் வண்ணமும் நாய்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.


அதுபோல் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் உள்ள பயிற்சி பெற்ற நாய்கள் கேன்சர் திசுக்களை இனம் பிரித்துக் காட்டுவதில் தேர்ந்தவையாக இருக்கின்றன. நாங்கள் இதனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்களின் இந்த முயற்சியானது ஆரம்பகட்ட கேன்சர் திசுக்களைக் கண்டறிவதில் ரசாயன் மற்றும் நானோ தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகின்றோம் என்று நாய்கள் பயிற்சி மையத்தின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான டாக்டர் சிண்டி ஓட்டோ குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் கலிபோர்னியாவில் உள்ள சிட்டு பவுண்டேஷன் மற்றும் பிரிட்டனில் செயல்படும் மருத்தவப் பயிற்சி பெற்ற நாய்களின் தொண்டு நிறுவனம் போன்ற லாப நோக்கில்லாத நிறுவனங்கள் கேன்சர் ஆராய்ச்சிக்கான தங்களின் பங்களிப்பை அளித்து வருகின்றன. கடந்த மே மாதம் அமெரிக்காவில் சிறுநீரகவியல் மருத்துவர்களின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது.

அதில் இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த இரண்டு பயிற்சி பெற்ற ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்கள் 98 சதவிகிதம் சிறுநீரில் காணப்பட்ட ப்ராஸ்டேட் கான்சர் திசுக்களை சரியாகக் கண்டறிந்தன என்பது குறிப்பிடப்பட்டது. ஆனால் அதன்பின்னர் தொடர்ந்த ஆராய்ச்சிகளில் முன்னேற்றம் காணப்படவில்லை என்பதுவும் தெரியவந்தது.

எனினும், நூற்றுக்கணக்கான நிறுவனங்களும், ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளும் கான்சர் நோயின் ஆரம்பகட்ட அறிகுறிகளைக் கண்டறிய முயற்சி செய்துகொண்டிருக்கும் இத்துறையில் தங்கள் மோப்ப சக்தி மூலம் கான்சர் திசுக்களைக் கண்டறிந்து சொல்லும் இந்த நாய்களும் ஒரு வகையில் ஆராய்ச்சியாளர்களைப் போலவே செயல்படுவதாக கூறப்படுகின்றது. மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: