சனி, 20 செப்டம்பர், 2014

சு.சுவாமி : ஏர்செல் மக்சிஸ் விவகாரத்தில் சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் !

ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம்  வாங்கிய விவகாரத்தில் மத்திய நிதியமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது அவர் காட்டிய ஆர்வம், பங்களிப்பு ஆகியவை குறித்து மத்தியப் புலனாய்வுத் துறை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார். இது தொடர்பாக தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:  "ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் 2006-இல் வாங்கிய விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சில ஆண்டுகளுக்கு முன்பே நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தேன். அண்மைக்காலத்தில் சு சுவாமி மிகுந்த மன உளைச்சலில் உள்ளார். மோடி தன்னை இப்படி தூக்கி எரிந்ததை தாங்க முடியாத சோகத்தில் உள்ளார். அடிபட்ட நரி எங்கெங்கெல்லாம் பிராண்டும் என்று சொல்ல முடியாது !
அதில், மத்திய நிதித் துறையின் கீழ் செயல்படும் அன்னிய நிதி முதலீடு மேம்பாட்டு வாரியம் அளித்த அனுமதியானது, விதிகளை மீறிய நடவடிக்கை என்று குற்றம்சாட்டினேன். இதன் பின்னணியில் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் பங்களிப்பை விசாரிக்கும்படி நீதிமன்றத்தில் முறையிட்டேன்.
 இந்நிலையில், நான் சுமத்திய அதே குற்றச்சாட்டுகளை சிபிஐயும் ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்புடைய குற்றப்பத்திரிகையில் உறுதிப்படுத்தியுள்ளது. ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஆனால், அந்த நிறுவனங்களின் நேரடி, மறைமுகத் தலைவராக இருப்பவர் மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்தகிருஷ்ணன். இதற்கான ஆதாரங்களைத்தான் சிபிஐ கண்டுபிடித்துள்ளது. அந்த வகையில், ஒரு உரிமையாளர் வேறு பெயர்களில் உள்ள தனது நிறுவனங்கள் மூலம் ஏர்செல் பங்குகளை வாங்க அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது.
 இதை ஒரு அரசுத் துறை எவ்வாறு கண்டுபிடிக்காமல் போனது? இதில் இருந்தே யாருடைய நெருக்குதலின் பேரிலோ அனுமதி வழங்கப்பட்டதா என்ற கேள்வியும்,  சந்தேகமும் இயல்பாகவே எழுகிறது. அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்தாலும், அப்போதைய காலத்தில் அத்துறையின் அமைச்சர் சிதம்பரம்தான். அதிகாரிகள் பரிந்துரைக்கும் கோப்புகளில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட்டேன் என்று சிதம்பரம் கூறுவது ஏற்புடையதாக இல்லை. பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு செயல்பட மாட்டார்கள்.
 ஏர்செல் - மேக்சிஸ் தொடர்புடைய வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 26-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் பங்கு குறித்தும், அனுமதி வழங்க அவர் ஆர்வம் ஏதும் காட்டினாரா? என்பது குறித்தும் சிபிஐ முழுமையாக விசாரிக்க வேண்டும்' என்றார் சுப்பிரமணியன் சுவாமி. dinamani.com

கருத்துகள் இல்லை: