திங்கள், 15 செப்டம்பர், 2014

சொத்து குவிப்பு வழக்கை பார்பன அக்கிரகாரத்திற்கு மாற்ற ஜெயலலிதா கோரிக்கை !

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களை தாண்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள இந்த வழக்கில் வரும் 20-ந்தேதி கோர்ட் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதனால், 20-ந்தேதி ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் நேரில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், விடுதலைப்புலிகள் மற்றும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால், தீர்ப்பு அளிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை பரப்பனஅக்ராஹாரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று கூறினார். தீர்ப்பு நெருங்கி வரும் நிலையில் ஜெயலலிதா புதிய மனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.maalaimalar.com ஏனுங்க நீதித்துறையே ஜெயாவை பொறுத்தவரை  பார்பன  அக்கிரகாரமாகவே இருக்கிறது , இதுவுல புதிசா என்ன வேண்டி கிடக்கிறது

கருத்துகள் இல்லை: