வெள்ளி, 18 ஏப்ரல், 2014

தெனாலிராமன்..இந்தியாவில் வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.


Vadivelu
இன்று வடிவேலுவின் தெனாலிராமன் வெளியாகிறது. அவர் காமெடியில் வசனத்திற்கு முக்கிய பங்களிப்பு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு வசனம், நகைச்சுவை உணர்வே இல்லாமல் செயற்கையான சென்டிமெண்ட் வசனங்களை எழுதி குவித்த ஆரூர் தாஸ். (பாசமலர்)
அவர் எந்த அளவிற்கு காமெடி வசனங்களை எழுதியிருப்பார்?
இருந்தாலும் வடிவேலு பேசுகிற ‘பாவனை’ க்கு எந்த வசனத்தையும் தூக்கி நிறுத்தி விடும் ஆற்றல் இருக்கிறது.
மிக அதிகமாக தனக்கு தானே பேசிக் கொள்வதிலும், mind voice க்கு ஏற்ப முக பாவனைகளோடு வசன உச்சரிப்புகளை அவர் மாற்றுகிற முறையும் அலாதியானது.
சோகமோ, மகிழ்ச்சியோ வசனம் பேசுகிறபோது, அந்த வசனத்திற்குள்ளேயே உணர்வும் பாவமும் இருக்கும். அந்த இரண்டுமே பாதி நடிப்பை கொண்டு வந்து விடும்.
ஆனால், ஒருவர் வசனம் பேசும்போது உடன் நடிக்கிறவர் அதற்கேற்ப reaction செய்வது தான் கடினம். அதை விட கடினம் mind voice க்கு ஏற்ப உதடு அசையாமல் முகபாவனைகளால் உணர்வுகளை சொல்வது. அதிலும் காமெடி செய்வது மிகக் கடினம்.
இவை இரண்டிலும் கில்லாடி வடிவேல். அவரின் சிறப்பே இதுதான். இந்தியாவில் இந்த பாணியில் நடிப்பதற்கு வடிவேலுக்கு இணையான நடிகர்கள் இல்லை.

இப்படியானவர்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புதிய படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அதனாலேயே இந்தப் படத்தை இன்று ஆவலோடு பார்க்கச் செல்கிறேன்.
நிச்சயம் ‘இந்திர லோகத்தில் நா. அழகப்பன்’ படம்போல் இருக்காது என்ற நம்பிக்கையிலும்.mathimaran.wordpress.com/

கருத்துகள் இல்லை: