வியாழன், 17 ஏப்ரல், 2014

Ex admk அமைச்சர் செல்வகணபதிக்கு தண்டனை: எம்.பி. பதவி பறிபோகுமா?

தமிழகத்தில் 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. ஆட்சி நடந்தது. அப்போது, மத்திய அரசு திட்டமான ஜவஹர் யோஜ்கர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதிகளை கொண்டு தமிழகத்தில் உள்ள சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டது. > இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடப்பதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். இதனடிப்படையில், 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் செல்வகணபதி உள்ளிட்ட ஐவர் மீது  சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் செல்வகணபதி, ஆச்சாரியலு, சத்திய மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.50 ஆயிரமும், பாரதிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.25 ஆயிரம் தண்டனை 2 ஆண்டு ஜெயில் என்பதால், 5 பேரும் 2 மாதங்களுக்குள் அப்பீல் செய்யும் வரை ஜெயிலுக்கு செல்ல வேண்டியதில்லை. அதுவரை இந்த ஜெயில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சி.பி.ஐ நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்தால் தற்போது தி.மு.க. சார்பில் ராஜ்யசபா எம்.பி.யாக உள்ள செல்வகணபதியின் எம்.பி. பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது. malaimalar.com

கருத்துகள் இல்லை: