புதன், 16 ஏப்ரல், 2014

Delhi கிரண்பேடிக்கு டில்லி முதல்வர் பதவி?

புதுடில்லி: பா.ஜ.வில் இணைய உள்ள முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி கிரண் பேடி புதுடில்லி மாநில முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.அன்னாஹசாரே இயக்கத்தில் இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் தனிக்கட்சி துவங்கியதையடுத்து அவர் மீது அதிருப்தி கொண்டார் கிரண்பேடி. இந்த சந்தர்ப்பத்தை பா.ஜ.பயன்படுத்திகொள்ள முனைந்தது. பா.ஜ., முக்கிய தலைவர்கள் தொடர்ந்து பேடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதனையடுத்து அவர் டில்லி மாநிலத்தின் முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப் பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எம்.பி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கானை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்ககிரண்பேடி மறுத்து வி்ட்டார். என பா.ஜ., கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் மீனாக்ஷி லெஹி தெரிவித்தார்.

கடந்த முறை நடைபெற்ற மாநில தேர்தலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப் பட்ட ஹர்ஸ்வர்தன், காங்கிரஸ் கட்சியின் கபில்சிபலை எதிர்த்து சாந்தினிசவுக் எம்.பி தொகுதியில் போட்டியிட உள்ளார்.

கடந்த முறை நடைபெற்ற மாநில சட்டசபைக்கான தேர்தலின் போது கிளீன் இமேஜ் என்றழைக்கப்பட்ட ஹர்ஸ் வர்தன் மற்றும் விஜய் கோயல் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டது. 70 இடங்களை கொண்ட சட்டசபையில் ஆட்சி அமைக்க போதுமான மெஜாரிட்டி கிடைக்க வில்லை என்பதால் ஆட்சி அமைக்க பா.ஜ., முன்வரவி்ல்லை.

இருப்பினும் தற்போது நடைபெற்று வரும் லோக்சபா தேர்தல் முடிந்த பின்னர் வரும மே மாதம் மத்தியி்ல் புதுடில்லி மாநில சட்டசபைக்கான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அச்சமயத்தில் கிரண்பேடி மாநில முதல்வர் வேட்பாளராக அறவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. dinamalar.com

கருத்துகள் இல்லை: