ஞாயிறு, 16 மார்ச், 2014

அ.தி.மு.க., ஒருபோதும், கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லை ! தமிழகத்துக்கே சேவை செய்ய வில்லை பின் எப்படி கர சேவை செய்ய போகிறீர்கள் ...

சென்னை:""தி.மு.க., தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகள் என்ற பெயரில், கருணாநிதி புளுகு மூட்டைகளை, அவிழ்த்து விட்டு உள்ளார்'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தூத்துக்குடியில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜியை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பிரசாரம் செய்தார். பிரசார பொதுக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 98 தலைப்புகளில், வாக்குறுதிகள் என்ற பெயரில், கருணாநிதி புளுகு மூட்டை களை அவிழ்த்து விட்டுள்ளார்.
அதிகளவு கூட்டத்தை கூட்ட ADMK யின் பிரசார கூட்டத்தில் பார் டான்சர் அழகிகள் நடனமாடி மக்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேர்தல் அதிகாரி, அழகிகளின் நடனத்தை நிறுத்த உத்தரவிட்டார். மேலும் அனுமதியின்றி நடனத்தை நடத்திய கட்சியினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இவற்றின் மீது, கடந்த, 10 ஆண்டுகளில், தி.மு.க., எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதன் மூலம், கருணாநிதி தன், தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்."கருணாநிதி ஆலோசனையை பெற்று தான், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, நடவடிக்கை எடுக்கிறது' என, பிரதமர் ஒரு முறை தெரிவித்துள்ளார். அவரது கூற்றை, தி.மு.க.,வினரும் பல முறை வழிமொழிந்திருக்கின்றனர்.அப்படியெனில், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள், நிறைவேற்றப்படாததற்கு காரணம் தி.மு.க., தலைவர் கருணாநிதி தானே?அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "தனி நபர் வருமான வரி உச்சவரம்பு, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிகமான தொகையை அறிவிக்க வேண்டும் என எண்ணி, "ஆறு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்' என, தி.மு.க., அறிவித்துள்ளது.கடந்த, 17 ஆண்டுகளாக, மத்திய ஆட்சியில், அங்கம் வகித்தபோது, இதை செய்யாமல், தற்போது, திடீரென ஞானோதயம் வந்தது போல், கருணாநிதி வாக்குறுதி அளித்திருப்பது, மக்களை ஏமாற்றும் செயல்.


பெரிய மோசடி:



அதேபோல், "அரசு பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு, ஓய்வு நாளில் வழங்கப்படும், ஓய்வூதிய பணிக்கொடைக்கு, வருமான வரி விலக்கு அளிக்க, மத்திய அரசை, தி.மு.க., வலியுறுத்தும்' என, தி.மு.க., தமிழில் வெளியிட்ட, தேர்தல் அறிக்கையில், தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட, தேர்தல் அறிக்கையில், பணிக்கொடை மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு, வருமான வரி விலக்கு அளிக்க, தி.மு.க., வலியுறுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதை நன்றாக கவனிக்க வேண்டும்.வருமான வரி சட்டத்தின்படி, ஓய்வு பெறும் நாளில் வழங்கப்படும் பணிக்கொடைக்கு, வருமான வரி விலக்கு அளிக்க, வருமான வரி சட்டத்தில், ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதற்காக, தி.மு.க., பாடுபடும் எனக் கூறிஇருப்பது, பெரிய மோசடி. தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை, கருணாநிதி படித்து பார்த்தாரா அல்லது தேர்தல் அறிக்கை குழு எழுதி கொடுத்ததை, கருணாநிதி அப்படியே ?வளியிட்டு விட்டாரா என்பதற்கு, அவர் பதில் அளிக்க வேண்டும்."சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை, முற்றிலும் தடை செய்ய, தி.மு.க., பாடுபடும்' என்று, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், தெரிவிக்கப் பட்டுள்ளது.சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாக, லோக்சபாவில் ஓட்டு போட்டுவிட்டு, தேர்தல் அறிக்கையில், தி.மு.க., அதை எதிர்க்கும் என்று கூறி இருப்பது, மிகப்பெரிய ஏமாற்று வேலை. பொய் பித்தலாட்டத்தின் உச்சகட்டம்.இவ்வாறு, முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

"கரசேவைக்கு ஆள் அனுப்பவில்லை':
""அயோத்தி கரசேவைக்கு, ஆட்களை அனுப்பவில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.தூத்துக்குடியில் நடந்த, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:தி.மு.க., நாளிதழில், வெளியிடப்பட்ட விளம்பரத்தில், அயோத்தி கரசேவைக்கு, நான் ஆட்களை அனுப்பியதாக, குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், எள்ளளவும் உண்மை இல்லை.அ.தி.மு.க., ஒருபோதும், கரசேவைக்கு ஆட்களை அனுப்பியது இல்லை என்பதை, திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்று பொய் சொல்வதை, தி.மு.க.,வினர், நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். dinamalar.com

கருத்துகள் இல்லை: