திங்கள், 17 மார்ச், 2014

Rahul Gandhi: தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணிக்கு தயார் ! முதல்ல வாசன் வைகையறா கட்சி மாறவிடாம பார்த்துக்கோங்க

புதுடில்லி:""தி.மு.க., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் உடன் நாங்கள் மீண்டும் கூட்டணி அமைத்து கொள்ள தயாராக இருக்கிறோம். அரசியல் லாபத்திற்காக, மதவாதம், பிரிவினைவாதத்தை தூண்டி விடும், கட்சிகளுக்கு எதிராக, ஓரணியில் திரளும் கட்சிகளுடன், நாங்கள் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம்,'' என, காங்., துணை தலைவர், ராகுல் கூறினார்.
மத்தியில், கடந்த, 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், கடும் சவாலை சந்திக்க வேண்டியுள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் தீவிர பிரசாரம், சில மாநிலங்களில், கூட்டணி கட்சிகள் வெளியேறியது போன்றவற்றால், காங்கிரஸ் இக்கட்டான நிலையை சந்தித்து வருகிறது.மத்திய நிதி அமைச்சர், சிதம்பரம் சில நாட்களுக்கு முன், "காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ளது; கடும் சவாலை, இத்தேர்தலில் சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது' என்று, கூறியிருந்தார்.
பார்லிமென்ட் கூட்டு குழுவின் தலைவரும், கேரளாவின், கோழிக்கோடு, காங்கிரஸ், எம்.பி.,யுமான, பி.சி.சாக்கோ, "ஊழல்களால் காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது' என்று, கூறியிருந்தார். மூத்த காங்கிரஸ் தலைவர்களே, இப்படி முணுமுணுக்க துவங்கியதால், "தேர்தல் முடிவை இப்போதோ கணிக்க துவங்கி விட்டார்களே!' என, எண்ண தோன்றியது.
அதற்கேற்ப, கருத்துக்கணிப்புகளும், "மத்தியில், காங்கிரஸ், கூட்டணி ஆட்சியை இழக்கும்' என, வெளிவந்த வண்ணம் உள்ளன.ஆனால், காங்கிரஸ் துணை தலைவரான, ராகுல் மிகுந்த நம்பிக்கையுடன், "காங்கிரஸ் கூட்டணி, தொடர்ந்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்' என்கிறார்.

செய்தி நிறுவனம் ஒன்றிற்கு, பல்வேறு சர்ச்சை கேள்விகளுக்கு, அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சி, வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், சவாலை முறியடித்து, வெற்றி பெறும்.. நாங்கள், சிறப்பான வெற்றியை பெறுவோம்; ஆட்சியில் அமர்வோம். அதே சமயம், எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என, குறிப்பிட்டு சொல்வதற்கு, நான் ஜோதிடர் அல்ல.


நம்பிக்கையில்லை:



கருத்துக்கணிப்புகள் மீது, எனக்கு நம்பிக்கையில்லை. கடந்த, 2004ம் ஆண்டு மற்றும் 2009ம் தேர்தல்களில், காங்கிரசுக்கு எதிராகத்தான், அவை இருந்தன. "காங்கிரஸ் தோல்வி அடையும்!' என்றனர். "துடைத்து எறியப்படும்!' என்றும் கூறினர். ஆனால், 2009 தேர்தலில், 206 தொகுதிகளில், நாங்கள் வெற்றி பெற்றோம்.சமுதாயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதில், எங்கள் ஆட்சி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. நாங்கள் ஆற்றிய பணிகளை மக்களுக்கு சிறப்பாகவும் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.கூட்டணி கட்சிகளை பொறுத்தமட்டில், எங்களுடன் இருந்த, தி.மு.க., மற்றும் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் மட்டுமே விலகி சென்றுள்ளனர்.மதவாதம், பிரிவினை வாதத்தை வைத்து அரசியல் லாபத்திற்காக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக கருத்துக்கள் கொண்ட, கட்சிகளுடன் நாங்கள் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். அந்த விஷயத்தில், எங்கள் கொள்கையுடன் ஒத்த கருத்து கொண்ட திரிணமுல் காங்., மற்றும் தி.மு.க.,வுடன் மீண்டும் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம்.


மக்கள் கருத்து:



அரசுடன் பல விஷயங்களில், நான் வேறுபட்டு இருந்திருக்கிறேன். "லோக்பால்' அவசர சட்டம் கொண்டு வந்த போது, மூத்த உறுப்பினர்களிடம் இருந்து நான் வேறுபட்டு இருந்தேன். மக்கள் கருத்தையும், கேட்க வேண்டும் என்ற அடிப்படையில், அப்படி தெரிவித்தது உண்டு. மக்கள் கருத்தை ஏற்கவேண்டும் என்ற, என் கருத்தை கட்சியும், கடைசியில் ஏற்றது.


ஈடுபாடு:

நான, 2004ல் தீவிர அரசியலுக்கு வந்தேன். அப்போதும், காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருந்த நிலையிலும், நான், பதவி எதையும் பெறவில்லை. அரசியல் மீது எனக்கிருந்த ஈடுபாடு காரணமாக, தீவிர அரசியலுக்கு வந்தேன். எந்தப் பதவியையும் எதிர்ப்பார்த்து செயல்படவில்லை. அதனால், தேர்தல் முடிந்த பின், எதிர்க்கட்சித் தலைவராக வர நேருமா... என்ற கேள்விக்கு இப்போது என்னால் பதிலளிக்க முடியாது. டில்லியில், புது கட்சியான, "ஆம் ஆத்மி'க்கு, ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கு, முழு ஆதரவை, காங்கிரஸ் அளித்தது. அவர்கள் ஆட்சியில் இருந்து விலகுவதற்கு நாங்கள் காரணமல்ல.வரவிருக்கும் லோக்சபா தேர்தலில், ஆம் ஆம்தி, தேசிய அளவில், தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை.மூன்றாவது முறையாக, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி, மத்தியில், கண்டிப்பாக அமையும். கடந்த, 10 ஆண்டுகளாக, எங்கள் ஆட்சி தொடர்வதால், மக்களுக்கு, சிறிய அளவில் அதிருப்தி ஏதாவது இருக்கலாம். இருந்தாலும், அனைத்து சவால்களையும், முறியடித்து, மூன்றாவது முறையாக, எங்கள் கூட்டணி, ஆட்சி அமைக்க போவது உறுதி.இவ்வாறு, ராகுல் கூறினார்.

காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த, கருணாநிதி தலைமையிலான, தி.மு.க., கடந்த ஆண்டு வெளியேறியது. இலங்கை தமிழர் விவகாரத்தால், கூட்டணியிலிருந்து வெளியேறிய, அக்கட்சி, அதே காரணத்தால், லோக்சபா தேர்தலிலும், காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பவில்லை.ஆனால், காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல், தேர்தல் வெற்றி, தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என, முன்கூட்டியே கணித்து, தி.மு.க., மற்றும் திரிணமுல் போன்ற கட்சிகளுக்கு, இப்போதே, அச்சாரம் போட்டு வைக்கும் விதமாக, மேற்கண்டவாறு பேட்டியளித்துள்ளார்.வரும், 16வது லோக்சபா தேர்தல், ஏப்ரல், 7ல் துவங்கி, மே மாதம், 12ம் தேதி வரை, ஒன்பது கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான ஓட்டுகள், மே, 16ல் எண்ணப்படுகின்றன.


"பொருத்தமான பெண் கிடைக்கட்டும்':



பேட்டியின் போது, ராகுலிடம், "எப்போது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்கள்? இன்னும் ஓராண்டாகுமா? அல்லது, இரு ஆண்டுகள் காத்திருப்பீர்களா?' என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகுல், ""பொருத்தமான பெண் கிடைத்தும், திருமணம் செய்து கொள்வேன்,'' என்றார்.""என் சகோதரி பிரியங்கா போல், அதிக இந்தி படங்களை பார்க்கும் வழக்கம் இல்லை,'' என்றும், ராகுல் குறிப்பிட்டார். dinamalar.com வைகையறா 

கருத்துகள் இல்லை: