ஞாயிறு, 16 மார்ச், 2014

KDMK new party by azhgiri? கலைஞர் திமுக என்ற பெயரில் சுவரொட்டி: அழகிரி ஆதரவாளர்கள் அதிரடி

தி.மு.க.வின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி எம்.பி. சமீபத்தில் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதல் தி.மு.க.வில் சலசலப்புகள் உருவாகி உள்ளது. மு.க.அழகிரியின் அதிரடி பேட்டிகளும், அவரது ஆதரவாளர்களின் போஸ்டர்களும் பரபரப்பை ஏற்படுத்தியே வருகின்றன.
இதன் உச்சக்கட்டமாக மு.க.அழகிரி, தனிக்கட்சி தொடங்குவார் என்ற பேச்சு எழுந்தபோது, அதனை அவர் மறுத்தார். ஆனால் கடந்த சில நாட்களாக பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், வைகோ, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் மு.க.அழகிரி.
அவரது அடுத்தக்கட்ட திட்டம்தான் என்ன? என்பது மர்மமாக உள்ளது. வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுப்பாரா? போட்டி வேட்பாளர்களை நிறுத்துவாரா என பல கேள்விகள் அரசியல் களத்தில் எழுந்துள்ளன.
இதுபற்றி அவரிடம் கேட்கும் போது, 17–ந்தேதி (நாளை) மதுரையில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாகவும் அதில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்து வருகிறார். நேற்று மதுரை வந்த அவரை விமான நிலையத்தில் நிருபர்கள் தொடர்பு கொண்டபோது, நாளைய கூட்டத்திற்கு பின்னர் முடிவு தெரியும் என்பதே அவரது பெரும்பாலான பதிலாக இருந்தது. KDMK நெசமாலும் அழகிரியோடதா அல்லாங்காட்டி ரரக்களின் தில்லாலங்கடி வேலையா ?

தி.மு.க. தலைமை தொடர்பு கொண்டதா? என கேட்டபோது, இல்லை என்று பதில் அளித்த அவர், தொடர்பு கொண்டாலும், தலைமையின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்பட மாட்டேன் என்றார்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், மதுரையில் அவரது வீட்டு அருகே ஜீவாநகர் பகுதியில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 'கலைஞர் தி.மு.க.'வின் பொதுச் செயலாளர், கட்சியும், கொடியும் ரெடி, பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் என்ற வாசகங்கள் கொண்ட அந்த சுவரொட்டியில் அழகிரி நடந்து வருவது போன்ற படமும், அவரது மகன் துரை தயாநிதி, முன்னாள் துணை மேயர் மன்னன் படமும் இடம் பெற்றுள்ளது.
நாளை, ஆதரவாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி, மு.க.அழகிரியின் முடிவை பிரதிபலிக்கிறதா? அவரது ஆதரவாளர்களின் மன நிலையை எதிரொலிக்கிறதா என்பதே அரசியல் களத்தின் உச்சக்கட்ட பரபரப்பாக உள்ளது. maalaimalar.com/

கருத்துகள் இல்லை: