புதன், 13 நவம்பர், 2013

Mumbai Campa Cola கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை



கேம்பகோலா குடியிருப்புகளை இடிக்க தடைமும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்புகளை இடிப்பதற்கு மே 31ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து, உச்ச நீதிமன்றம் தானே முன் வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேம்பகோலா குடியிருப்புவாசிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மாவட்ட நிர்வாகம் இன்று வளாகத்தின் சுற்றுச் சுவரை இடித்து வந்த நிலையில், மே 31ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை இடிக்க தடை விதித்து, அதில் வசித்து வருவோர் வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித் துள்ளது உச்ச நீதிமன்றம்.தங்களது குடியிருப்புகள் இடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குடியிருப்பு வாசிகள் நடத்தும் போராட்டத்தை செய்தித் தாள்கள் வழியாக பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அங்கு வசிப்போர், தங்களது வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர் nakkheeran.in

கருத்துகள் இல்லை: