சனி, 16 நவம்பர், 2013

ஏற்காடு இடைத்தேர்தல் அதிமுக– திமுக நேரடி போட்டி! சரோஜாவா? மாறனா ?

ஏற்காடு இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் முடிந்தது: அதிமுக– திமுக நேரடி போட்டி சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது வருகிற 18-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. ஏற்காடு தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க.வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 27 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தேமுதிக வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது. வேட்புமனுக்கள் பரிசீலனை வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை வருகிற 18-ந் தேதி தேர்தல் நடத்தும் அதிகாரி சபாபதி முன்னிலையில் நடக்கிறது. 20-ந் தேதி வாபஸ் பெற கடைசி நாளாகும். இறுதி வேட்பாளர் பட்டியலும் அன்று மாலையே வெளியிடப்படும். வேட்பு மனு பரிசீலனையில் சாதி மாறி மனுதாக்கல் செய்த சில சுயேச்சை வேட்பாளர்களின் மனு தள்ளுபடி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்காடு இடைத்தேர்தலில் டிசம்பர் 4ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. டிசம்பர் 8ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: