வியாழன், 14 நவம்பர், 2013

வீடியோவில் பதிவான அதிமுக வாள் வீச்சு சாகசம் ! அமைதி பூங்காவின் அழகு பாரீர் !

  மதுரை மேலூரைச் சேர்ந்த அ.தி.மு க பிரமுகர் பாஸ்கரன். இவர் அதிமுகவில் அம்மா பேரவை என்ற அணி தோன்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் இவர் மீது கட்சியில் பல்வேறு அதிருப்திகள் இருந்து வந்ததால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்.
இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு 8.50க்கு உணவு அருந்திவிட்டு தன் மனைவி மகன் மற்றும் நண்பர் பாண்டியுடன் போர்டிகோவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது உள்ளே அரிவாளுடன் புகுந்த மர்ம நபர், பாஸ்கரனை வெட்ட முயன்றார்.
இந்த சம்பவத்தில் மர்ம நபர்  பாஸ்கரனை வெட்ட வருவதும், அவரிடமிருந்து   தப்பிப்பதற்கு சேர்களை அந்த மர்ம நபர் மீது பாஸ்கரன் தூக்கி போடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது. சிறிது நேரத்திற்கு பிறகு அந்த மர்ம நபரை பிடிக்க, அனைவரும் சேர்ந்து ஒன்றாக போராடினார்கள்.
ஆனால் அந்த நபர் பின் வாசல் வழியாக சென்றுவிட்டு, மறுபடியும் முன் வாசல் வழியாக தப்பித்து ஓடிவிட்டார்
தப்பிக்கும் போது பிடிக்கமுற்பட்ட பொழுது முடியவில்லை. இது பற்றி மேலூர் காவல் நிலையத்தில் பாஸ்கர் அளித்துள்ள புகாரில், முன்விரோதமே இதற்கு காரணம் எனக் கூறியுள்ளார்.
புகாரின்பேரில் மேலூர் காந்தி நகர் ராஜா என்பவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்,
இது பற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபொழுது, நிலப்பிரச்னையில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இச்சம்பவம் நடந்ததாக தெரியவந்துள்ளதாகவும், இது பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணையில் மேலும் பல  திடுக்கிடும்   தகவல்களும் , திருப்பங்களும்  வெளிவரும் என்றும் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை: