வெள்ளி, 15 நவம்பர், 2013

ஃபேஸ்புக் மூலம் மங்கள்யானை தொடரும் 2 லட்சம் பேர்

நவ.10-ஃபேஸ் புக் சமூக வலை தளம் மூலம் இஸ்ரோ வின் மங்கள்யான் விண்கலத் தை 2 லட்சம் பேர் பின் தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.
தொடங்கப்பட்ட இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதி காரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தொடர்பான தக வல்களை அவ்வப்போது வழங்குவதற்காக ஃபேஸ் புக் பக்கத்தை அக்டோபர் 22ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது.
இந்த பக்கத்தை வெள்ளிக்கிழமை (நவ.8) வரை 2 லட்சத்து 7 ஆயி ரத்து 173 பேர் பின்தொ டர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 704 பேர், இத்திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பி.எஸ்.எல்.வி. சி-25 ராக்கெட் மூலம் மங்கள் யான் விண்கலம் நவம்பர் 5ஆம் தேதி பிற்பகல் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தை அனுப்பு வதற்கு முன்னதாக ஒவ் வொரு நிலையிலும் படத் துடன் இந்த பக்கத்தில் தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. விண்கலம் வெற்றி கரமாக விண்ணில் செலுத்தப்பட்ட பின்னர், அதன் இப்போதைய செயல் பாடு, சுற்றுப் பாதை, பாதையின் தூரம் அதிகரிப்பு தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் இப்பக்கத்தில் வழங்கப் பட்டு வருகின்றன.
மேலும் இப்பக்கத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் பதிவர்கள் விவாதிக்கின்றனர். ஒரு சில கேள்விகளுக்கு இஸ் ரோவும் உரிய பதில்களை வழங்கி வருகிறது.
இத்தகைய நல்ல யோச னையை தெரிவித்ததற் காக ரகுநாதனுக்கு இஸ் ரோ அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
அதேபோல், விண் வெளித் திட்டங்கள், விண்கலத்தில் உள்ள மோட்டார்கள் போன்ற வை தொடர்பான கேள்வி களுக்கும் இஸ்ரோ பதில ளித்துள்ளது.
விண்கலத்தின் சுற்றுப் பாதை மீண்டும் அதிக ரிப்பு: மங்கள்யான் விண் கலத்தின் சுற்றுப்பாதை வெள்ளிக்கிழமை அதி காலை 2.15 மணிக்கு வெற்றிகரமாக 40 ஆயிரத்து 186 கிலோ மீட்டராக அதிகரிக்கப் பட்டது. விண்கலத்தின் வேகம் வினாடிக்கு 201 மீட்டராக வும் உயர்த்தப்பட்டது. பாதையைச் சுற்றிவர விண்கலம் எடுத்துக் கொள்ளும் நேரம் 11 மணி 9 நிமிடங்கள் ஆகும்.
விண்கலத்தின் பாதை மூன்றாவது முறையாக சனிக்கிழமை (நவ.9) அதி காலை 2 மணி 10 நிமிடங் களுக்கு அதிகரிக்கப்பட உள்ளது. மொத்தம் 12 நிமிடங்களுக்கு 103 கிலோ எரிபொருள் எரிக்கப்பட உள்ளது. விண்கலத்தின் பாதை 71 ஆயிரத்து 635 கிலோமீட்டராக அதி கரிக்கப்படும் என இஸ் ரோ அதிகாரிகள் தெரி வித்தனர்.
ஜடேஜா கருத்து
"இதுவரை செவ்வாய் கோளுக்கு அனுப்பிய விண்கலங்களிலேயே இஸ்ரோ அனுப்பிய விண் கலம் தான் மிகக் குறைந்த செலவில் அனுப்பப்படு கிறது. ரூ.450 கோடியில் அதாவது, கிலோ மீட்டருக்கு ரூ.12 செலவில், ஆட்டோ கட்டணத்தில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் பயணம் செய் வது உண்மையிலேயே இந்திய திட்டம்தான்'.

கருத்துகள் இல்லை: