சனி, 16 மார்ச், 2013

பரதேசி... நிச்சயம் ஒருமுறை பாருங்கள்

வெளிநாடுகளில் நேற்றே ரிலீஸ் ஆகியுள்ள பரதேசிக்கு கிடைத்துள்ள ரெஸ்பான்ஸ், சமீப நாட்களில் வேறு எந்த தமிழ் படத்துக்கும் கிடைக்காதது என்பதை அடித்துச் சொல்லலாம். படம் பார்த்த பலர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்பது பேச்சில் தெரிகிறது. வார்த்தைகள் வராத நிலையில் பலர்!
பாலா படங்களில் (இதுவரை) பெஸ்ட் இதுதான் என்ற கருத்து பலரிடம் உள்ளது.
கமர்ஷல் சினிமா படமல்ல இது. பாலா படத்தில் வழமையாக உள்ள நகைச்சுவை இருக்கிறது, ஆனால், அதுவே ஒரு கனத்த சோகம் கலந்த நகைச்சுவைதான். நல்லவனான ஹரோவும் கிடையாது, கெட்டவனான வில்லனும் கிடையாது. நல்லது, கெட்டது கலந்த மனித கதாபாத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட படம்.
சீரியஸ் சினிமா, அல்லது யதார்த்த சினிமா ரசிகராக நீங்கள் இருந்தால் கண்களை மூடிக்கொண்டு பார்க்கலாம். அதேநேரத்தில், ஸ்பை த்ரில்லர், ரொமான்டிக் காமெடி படம் மட்டும் பார்க்கும் என்னையும் கடைசிவரை லயிப்புடன் உட்கார வைத்த படம்.
படத்தில் நிச்சயமாக ஏதோ ஒரு லயிப்பு இருக்கிறது இருக்கிறது. இந்தப் படத்துக்கு பாடல்கள் அவ்வளவு அவசியம் என்று தோன்றவில்லை. பின்னணி இசை பலருக்கு பிடிக்கவில்லை, அல்லது, இளையராஜா இருந்தால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை ஏற்படுத்தியுள்ளதை தியேட்டரில் பார்க்க முடிந்தது.
ஆனால், நிஜம் அதுவல்ல இன்றைய ட்ரென்டில், அந்த நாளைய (1930களில் தொடங்கும் படம்) சூழ்நிலையில் கம்போஸ் பண்ணப்பட்ட இசை என்ற ரீதியில் அருமையாக உள்ளது. படம் தாக்கத்தை ஏற்படுத்துவதில், பின்னணி இசைக்கும் பங்குண்டு. அநேகமாக எல்லோரும் பார்ப்பீர்கள் என்று நினைப்பதால், கதை வேண்டாம்.
சரி, மைனஸ் பாயின்டுகள் என்ன? நீங்கள் வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், குழந்தைகளை அழைத்து செல்லாதீர்கள், படம் அவர்களுக்கு புரியாது.
அதேபோல இந்த படம் புரிவதற்கு, விபரம் தெரிந்த வயதுவரை இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அப்போதுதான், அழுத்தம் புரியும். பிரிட்டிஷ் காலத்தில், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய ஆசைகாட்டி கொண்டு செல்லப்பட்ட வரலாற்று பின்னணி தெரிந்தால், கூடுதல் அழுத்தம் கிடைக்கும்.
படம் கமர்ஷலாக ஓடுமா என்று சொல்ல தெரியவில்லை. காரணம், இப்படியொரு படம் இதுவரை வந்ததில்லை. ஓடினால் நல்ல படம் ஓடிய சந்தோஷம். அவார்டுகளை அள்ளிச் செல்லக்கூடிய படம்.
நிச்சயம் ஒருமுறை பாருங்கள், இந்தப் படத்தின் கலைஞர்களுக்கு கொடுக்கும் உயர்ந்த அங்கீகாரமாக viruviruppu,com

கருத்துகள் இல்லை: