சனி, 23 பிப்ரவரி, 2013

Hydrabad 8 தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு

ஐதராபாத் தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புக்கு இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கம்தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. இதில் தொடர்புடைய 8 தீவிரவாதிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. அங்குள்ள தில்சுக் நகரில் 2 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடித்தது. இதில், பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்த 119 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வர்களில் 5 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. குண்டு வெடித்த இடங்களை மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே நேற்று காலை பார்வையிட்டார். அவருடன் ஆந்திரா ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் என்.கே.சிங் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். குண்டுவெடிப்பு குறித்த விவரங்களை ஆந்திரா போலீஸ் டி.ஜி.பி தினேஷ் ரெட்டி தெரிவித்தார்.அங்கு விசாரணையில் ஈடுபட்டிருந்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளிடம் ஷிண்டே ஆலோசனை நடத்தினார். குண்டுவெடித்த இடத்தில் கிடைத்த தடயங்கள் குறித்து அவர்களிடம் ஷிண்டே கேட்டறிந்தார்.
பின்னர், மருத்துவமனைகளுக்கு சென்ற ஷிண்டே குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே, குண்டு வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 2 இடங்களிலும் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது. இதை சைக்கிளில் வைத்துள்ளனர். குண்டுவெடித்த இடங்களில் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து சிதறிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007ல் ஐதராபாத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் இதேபோன்ற குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் சிக்கினர். எனவே, இந்த குண்டுவெடிப்பும், இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் சதியாக இருக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் மக்பூல், இம்ரான்கான் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். ஐதராபாத்தின் தில்சுக் நகர் பகுதியில் எங்கு குண்டு வைக்கலாம் என்று தாங்கள் கடந்த ஜூலை மாதம் மோட்டார் சைக்கிளில் சென்று ஒத்திகை பார்த்ததாக டெல்லி போலீசிடம் இருவரும் வாக்குமூலம் அளித்திருந்தனர். இந்தியன் முஜாகிதீன் இயக்கத் தலைவர் ரியாஸ்  பட்கல் உத்தரவின்பேரில் அவர்கள் இந்த ஒத்திகையை பார்த்துள்ளனர்.

ஐதராபாத் குண்டு வெடிப்பில் ரியாஸ் பட்கல் உட்பட 8 தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களில், ரியாஸ் பட்கல் பாகிஸ்தானில் இருக்கிறார். மற்றவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதில், 3 தீவிரவாதிகள் கடந்த மாதம் ஐதராபாத் போலீசிடம் சிக்காமல் தப்பிவிட்டனர். லாட்ஜ் ஒன்றில் பதுங்கி இருந்த அவர்களை பிடிக்க போலீசார் சென்றனர்.

ஆனால், அதற்கு முன்பே அவர்கள் தப்பிவிட்டனர். அவர்கள்தான் சைக்கிள் வெடிகுண்டுகளை வைத்திருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதை உறுதி செய்ய தில்சுக் நகரில் பொருத்தப்பட்டிருந்த 8 கண்காணிப்பு கேமராக்க ளில் பதிவான வீடியோவை பார்க்க போலீசார் முயற்சித் தனர். ஆனால் அந்த கேம ராக்களின் கேபிள் துண்டிக் கப்பட்டதால் அவை செய லிழந்து விட்டது தெரிய வந்தது. தலைமறைவான தீவிரவாதிகளை தேடி போலீஸ் தனிப்படைகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை: