திங்கள், 18 பிப்ரவரி, 2013

குமுதம் அலுவலகம் முற்றுகை! வெளியே தி.மு.க.-வினர் கோஷம்!!

Viruvirupu
வாரம் இருமுறை வெளியாகும் குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மற்றும் அக்கட்சியின் பிரமுகர் நடிகை குஷ்பு பற்றி வெளியான கட்டுரையை கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்தப் பத்திரிகை அலுவலகம், இன்று 2-வது நாளாக தி.மு.க.-வினரின் முற்றுகைக்கு உள்ளானது.
சென்னையில் அமைந்துள்ள குமுதம் குழும நிறுவனத்தை 2-வது நாளாக சேகர் பாபு தலைமையில் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பிய தி.மு.க.-வினர் 200 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
நேற்றும் குமுதம் குழும நிறுவனம் முன்பாக தி.மு.க.வினரும், தி.க.வினரும் ஒன்று கூடி முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்று கைதாகினர். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக குமுதம் குழுமத்தை முற்றுகையிட தி.மு.க.வினர் குவிந்ததில், 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கட்டுரை தொடர்பாக, சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதா, கட்சி ரீதியான போராட்டம் அறிவிப்பதா என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்திருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, குமுதம் ரிப்போர்ட்டர் சஞ்சிகையை தி.மு.க.-வினர் யாரும் வாங்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த விவகாரத்தில், பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் உட்பட பலர், பத்திரிகையில் வெளியான கட்டுரை விரசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தனர். சமூக இணையத்தளங்களில் குஷ்புவிற்கு ஏராளமானவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் கருணாநிதி, குஷ்பு ஆகியோரின் ரியாக்ஷனை கீழேயுள்ள லிங்குகளில் பார்க்கவும்

கருத்துகள் இல்லை: