போட்டோ ஜர்னலிசம், இந்திய பத்திரிகைகளுக்கு உயிரோட்டமாக இருந்து வருவது
மறுக்க முடியாத உண்மையாகும். எழுத்துகளால் வடிக்க முடியாத உணர்வுகளை,
ஃபோட்டோ ஜர்னலிசம், சுலபமாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வலிமை
உடையது.இந்தியாவிலுள்ள புகைப்பட கலைஞர்களில் ஒருவரான ரகுராய், கடந்த 47 ஆண்டுகளாக, பத்திரிகைகளுக்கு அளித்த பங்கு சாதாரணமானதல்ல.இன்றைய
நவீன இந்தியாவின் சமூக வளர்ச்சியை தனிப்பட்ட முறையில், துணிச்சலுடன்
புகைப்படங்களாக எடுத்து வெளியிட்ட வகையில், இந்திய ஃபோட்டோ ஜர்னலிசத்தில்
அவருக்கு தனியிடம் உண்டு
.ஹென்றி கார்டியர் பிரெஸ்ஸன் என்ற பிரெஞ்சு புகைப்பட கலைஞரை, தனது குருவாக துவக்கத்தில் ஏற்று கொண்ட ரகுராய், 1971ம் ஆண்டு தன்னுடைய படைப்புகளை பாரிஸ் நகரில் கண்காட்சியாக வைத்த போது, உலக புகழ்பெற்ற மேக்னம் ஃபோட்டோ ஏஜென்சி, இவரை உலகளவில் அங்கீகரித்த நேரத்தில் இந்தியாவிலும் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தது.< பின்னர், தஸ்வீர் ஆர்ட்ஸ் அமைப்புடன் இணைந்து தன்னுடைய புகைப்படங்களில் சிறந்தவைகளை தேர்ந்தெடுத்து, "தெய்வீக தருணங்கள்' (டிவைன் மூமென்ட்ஸ்) என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியை நாடு முழுவதும் நடத்த துவங்கினார்.
பிரபலங்கள் முதல் அரசியல் நிகழ்வுகள், இயற்கை காட்சிகள், விலங்குகள் என ஒவ்வொரு புகைப்படமும் தகவல்களை உள்ளடக்கிய வகையில், இவரது கைவண்ணத்தில் உருவாயின. சர்வதேச அளவில் கண்காட்சிகளும், புத்தகங்களையும், புகைப்பட கட்டுரைகளையும் உருவாக்கியுள்ள ரகுராய், இந்திய ஃபோட்டோ ஜர்னலிசத்தில் முக்கிய நபராக விளங்கி வருகிறார்.

இவரது புகைப்பட தொகுப்பு கண்காட்சி சமீபத்தில் பெங்களூரு, கஸ்தூரிபா கிராஸ் ரோட்டிலுள்ள "சுவா ஹவுஸில் நடந்தது. dinamalar,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக