.சவூதி அரேபியாவில் 45க்கும் மேற்பட்ட வீட்டுப் பணிப்பெண்கள் மரண
தண்டனைக்காகக் காத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில்
வெளிநாட்டு பணியாளர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதாக சர்வதேச அளவில்
விமர்சனங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. அதில்
வீட்டு உரிமையாளர்களின் கற்பழிப்பு முயற்சியிலிருந்த தப்புவதற்காக அவர்கள்
மீது தாக்குதல் நடத்திய பணிப்பெண்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு
சிறைவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு மரண தண்டனைக்கு
உள்ளானோரில் அதிகமானோர் இந்தோனேஷிய நாட்டவர் என்பதோடு இவர்களில் இலங்கை,
பிலிம்பைன்ஸ், இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாட்டவர்களும் உள்ளதாக
மனித உரிமை அமைப்புகள் நம்புகின்றன. இந்தோனேஷியாவின் 27 வயதான மூடி
துர்சிலாவர்தி பின்டி என்ற பெண் தனது தொழில் வழங்குனரை கொன்றதாகக் குற்றம்
சாட்டப்பட்டு சிறையிலுள்ளார். இவர் மரண தண்டனையை சந்திக்க வுள்ளார். கடந்த
2010 ஆம் ஆண்டு மேற்படி பெண்ணை தொழில் வழங்குனர் கற்பழிக்க முற்பட்டபோதே
அந்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.சவூதியில் மரணதண்டனைக்கு உள்ளான இலங்கையின்
ரிஸானா நபீக்கின் சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியா மீது சர்வதேச அளவில்
கண்டனங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது ooddram.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக