நன்நடத்தையால் சிறையிலிருந்தவிடுதலையாகி, மீண்டும் 9 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்தவனை போலீசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிரா
மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தை சேர்ந்தவன் சுனில் சுரேஷ் (32). கடந்த
2002-ம் ஆண்டு நாசிக் மாவட்டத்தில் ஒரு சிறுமியை கற்பழித்து கொலை செய்த
குற்றத்திற்காக இவனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கபட்டது.இந்த
தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர்நீதி மன்றத்தில், மேல்முறையீடு செய்ததன்
பேரில், மரண தண்டனையை 17 வருட கடுங்காவல் தண்டனையாக குறைத்து
உத்தரவிடப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் நன்நடத்தையை காரணம் காட்டி சிறை
நிர்வாகம் சுரேஷை விடுதலை செய்தது.கடந்த
மாதம் 28-ம் தேதி, ஷிர்டி ரெயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியை கொடூரமாக
கற்பழித்து, சிறுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்த சுரேஷ் போலீசாரிடம்
சிக்காமல் தப்பித்துவந்தான்.இந்நிலையில்
ஷிர்டி ரயில் நிலையம் அருகே சுற்றி திரிந்த சுரேஷை சந்தேகத்தின் பேரில்
கைது செய்த போலீசார், விசாரணையின் போது சுரேஷ்தான் அந்த கொடூர குற்றத்தை
செய்தான் என்பததெரிந்துகொண்டனர்.இதையடுத்து, அவனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்தொடர்ந்து 2 சிறுமிகளை கற்பழித்து கொன்ற சுரேஷிற்கு அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படுமென தெரிகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக