ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்களின் வசதிக்காக சென்னை முழுவதும் ஆயிரம்
சிற்றுண்டி உணவகங்களை திறக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதற்கட்டமாக சென்னை நகரில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் ஒரு சிற்றுண்டி உணவகம் என்ற அடிப்படையில் 200 சிற்றுண்டி உணவகங்களை தொடங்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த உணவகங்களில் இட்லி ஒன்று 1 ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும்.
இந்த திட்டத்திற்காக 500 மெட்ரிக் டன் அரிசியை, கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என்ற சலுகை விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஒரு நல்ல திட்டம். மற்றைய நகரங்களுக்கும் இதே திட்டத்தை நீடித்தால் நல்லது. viruviruppu.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக