ஹால்டியா: மேற்கு வங்க மாநிலத்திற்கு முதலீடு திரட்டுவதற்காக, முதல்வர்,
மம்தா பானர்ஜி கூட்டிய, தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து
கொண்டவர்களை, பெயர் சொல்லி அழைத்தும், பாட்டு பாட சொல்லி வற்புறுத்தியும்,
மம்தா செய்த அலம்பல்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.குஜராத் முதல்வர்,
நரேந்திர மோடியின் வழியை பின்பற்றி, பல மாநில முதல்வர்களும், தங்கள்
மாநிலத்திற்கு தேவையான நிதியை, முதலீட்டை திரட்டுவதற்காக, தொழிலதிபர்கள்
மாநாடுகளை கூட்டுவது, சமீப காலத்திய வழக்கமாக உள்ளது.மேற்கு வங்க
முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான, மம்தா பானர்ஜிக்கும்,
தொழிலதிபர் மாநாட்டை நடத்தி, நிதி திரட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
இதற்காக, மாநிலத்தின் துறைமுக நகரமான ஹால்டியாவின், நட்சத்திர ஓட்டலில்
ஏற்பாடு செய்யப்பட்டது.நாட்டின் முன்னணி தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்
பப்பட்டிருந்தது; மாநாட் டிற்கு, "பெங்கால் லீட்ஸ்' என, பெயரும்
வைக்கப்பட்டிருந்தது. மாநிலத்தின் தொழில் வளம், தொழில்களுக்கான வாய்ப்பு,
மாநில அரசு வழங்கும் சலுகைகள் போன்றவற்றை பட்டியலிடுவதற்கு பதிலாக, "மம்தா
பானர்ஜியின், "பந்தா'வை காட்டும் நிகழ்ச்சியாகவே அது அமைந்திருந்தது' என,
தொழிலதிபர்கள் சிலர் குறைபட்டு கொண்டனர்.
"வயலின் வாசிங்க'
துன்சேரி பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் தலைவர், தனுகாவை மேடைக்கு அழைத்து, வயலின் கருவியை இசைக்குமாறு கேட்டு கொண்டார். அவரும், சங்கோஜத்துடன் வயலின் இசைத்து, முதல்வரின் அன்பை பெற்றார். மதுவுக்கு மயங்கும் வண்டுகள் போல் அதிகார போதைக்கு ஏங்கும் மம்தாக்கள் உங்கள் மாநிலத்துக்கு வந்த டாடா நானோ கார் திட்டத்தை தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று குலைத்து விட்டு , அதை குஜராத்துக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு , இப்போது தொழில் அதிபர்களுடன் கொண்டாட்டமா ...டாடாவுக்கு நிலத்தை கொடுத்ததற்கு தானே தாண்டவமாடினீர்கள் .. இன்று அவர்களுடன் நாட்டியமாடி நிலத்தை கொடுக்க போகிறீர்கள் ... அம்மாவும் திதி யும் முந்தைய ஆட்சியை திட்ட வேண்டியது ... பின் அவர்கள் செய்ததையே பின் பற்ற வேண்டியது... .
ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர்களில் ஒருவரான, சஞ்சீவ் கோயங்கா கையில், "மைக்'கை கொடுத்து, இந்தி பட பாடல் ஒன்றை பாடுமாறு உத்தரவிட்டார், மம்தா. அதை அவர் அரையும் குறையுமாக பாடினார். கூடுதலாக, ரவீந்திரநாத் தாகூரின் பாடல் ஒன்றின் சில வரிகளையும் பாடி, முதல்வரை புல்லரிக்க வைத்தார் அவர்.
"தேவேஸ்வர்... வாங்க...'
ஐ.டி.சி., நிறுவன தலைவர், தேவேஸ்வர் வந்திருக்கிறார் என, தவறாக நினைத்த மம்தா, "ஐ.டி.சி., தேவேஸ்வர் இங்கே வாங்க...' என அழைத்தார். கூட்டத்திற்கு தேவேஸ்வர் வரவில்லை; நிறுவனத்தின் உயரதிகாரி, குருஷ் கிரான்ட் மேடையேறினார்.அவரை பிற தொழிலதிபர்களிடம், "இதே, தேவேஸ்வர், உங்களிடம் சில வார்த்தைகளை பேசுவார்...' என கூறி, "மைக்'கை கொடுத்தார். "மேடம் நான் தேவேஸ்வர் இல்லை; கிரான்ட்...' என, அந்த அதிகாரி கூற, அதை பற்றி கவலைப்படாமல், தேவேஸ்வர் பெயரையே பல முறை, திரும்ப திரும்ப உச்சரித்தார் மம்தா.குரூப் போட்டோ எடுப்பதற்காக, ஒவ்வொரு தொழிலதிபர்களையும் பெயர் சொல்லி அழைத்த மம்தா, "நீங்க இங்கே வாங்க... நீங்க பின்னால் போய் நில்லுங்க...' என, கட்டளைகளை இட்டு, அதிர வைத்தார்."செயில்' நிறுவன தலைவரை அழைக்க, "செயில் எங்கே... இங்கே வாங்க' என உத்தரவிட்டார். என்.டி.பி.சி., நிறுவன தலைவரை அழைக்க, "என்.டி.பி.சி., எங்கே இருக்கிறீங்க...' என, "அன்புடன்' அழைத்தார்.இப்படி மம்தாவின் அலம்பல் அதிகமாக இருந்த கூட்டத்தில் போதுமான முதலீடு திரண்டதாக செய்திகள் இல்லை. dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக