ஆங்கிலம் அல்லது இந்தியில் தான் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமைச்சர்கள் பேச முடியும் என்று விதியை வைத்துள்ளனர். இதுகுறித்து நீண்ட காலமாகவே சர்ச்சை நி்லவி வருகிறது. இந்தியாவில் பல மொழிகள் அதிகாரப்பூர்வ மொழிகளாக இருக்கும் நிலையில் ஏன் இந்தத் தடை என்று பிரச்சினை எழுப்பப்பட்டது.
இதையடுத்து உறுப்பினர்கள் (எம்.பிக்கள்) எந்த மொழியில் வேண்டுமானாலும் பேசலாம், கேள்வி கேட்கலாம் என இந்த விதியில் தளர்வு செய்யப்பட்டது. இருப்பினும் அமைச்சர்கள் மட்டும் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் பேச முடியும்.
இந்த விதிமுறையால் அஞ்சா நெஞ்சர் என திமுக தொண்டர்களால் செல்லமாக அழைக்கப்படும் மு.க.அழகிரிக்கு நாடாளுமன்றம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.
இரு மொழிகளிலும் அவருக்குப் புலமை போதாது என்பதால் நாடாளுமன்றக் கூட்டங்களில் அழகிரியால் கலந்து கொள்ள முடியாத நிலை. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
அழகிரிக்குப் பதில் இணை அமைச்சரான ஸ்ரீகாந்த் ஜெனாவே பதிலளித்து வந்தார். இந்த நிலையில் தற்போது அழகிரியின் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றக் கூட்டங்களில் இனி அழகிரி எந்தவித பயமும் இல்லாமல் வந்து போக முடியும். லோக்சபா சபாநாயகர் மீரா குமார் தெரிவித்துள்ள புதிய திட்டத்தின்படி, ரசாயாணத்துறை தொடர்பாக கேட்கப்படும் முக்கியக் கேள்விகளுக்கான ஆங்கில பதிலை அழகிரி எழுதி வைத்து வாசிப்பார். துணைக் கேள்விளுக்கு இணை அமைச்சர் ஜெனா பதிலளிப்பார்.
இதன் மூலம் அழகிரியின் மொழிப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதிவு செய்தது: 18 Jul 2010 7:34 pm
இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய கலைஞர், இந்தியின் அவசியத்தை தன் மகன் மூலம் இப்போது உணர்ந்து இருப்பார். இப்படிதானே அயல் நாட்டில் வாழும் தமிழர்கள் அவதி படுகிறார்கள். மொழியின் பேரை சொல்லி எங்களை முட்டாளாக்கிய தலைவரே. மாபெரும் சபைதனில் உங்கள் மகனுக்கு நேர்ந்ததை பார்த்திரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக