வெள்ளி, 23 ஜூலை, 2010

உயர் ஜாதி ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு-மத்திய அரசு திட்டம்

டெல்லி: உயர் ஜாதியில் உள்ள ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக பொருளாதார ரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தேசியக் கமிஷனின் அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், பொருளாதாரரீதியிலான பிற்படுத்தப்பட்டவர்களை பிற்படுத்தவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

வருமான வரி செலுத்தாத உயர் ஜாதியினரை இந்தப் பட்டியலில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை விரைவில் மத்திய அரசு சட்டமாக்கும் என்று தெரிகிறது.

நக்ஸல் 'எபெக்ட்': ஓ.பி.சி. பட்டியலில் மேலும் சில சாதிகள்:

இதற்கிடையே நக்ஸலைட் பாதிப்பு அதிகம் உள்ள ஜார்க்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த சில சாதியினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இவர்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இந்தப் பட்டியலில் சேர்ப்பதன் மூலம் அவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்.

சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் நக்ஸல் பிரச்சனையை ஆயுதங்களை மட்டும் கொண்டு அடக்க முடியாது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

மேலும் சட்டீஸ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசமான டாமன் மற்றும் டையூ பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினங்கள் சிலவற்றையும் இந்தப் பட்டியலில் சேர்க்க முடிவாகியுள்ளது.

புதிய சாதிகள் அடங்கிய ஓ.பி.சி. பட்டியலை சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
பதிவு செய்தவர்: இ வி ராமசாமி நாயக்கன்
பதிவு செய்தது: 23 Jul 2010 6:16 pm
நான் மொதல்லே ஜாதி அடிப்படை ரிசெர்வசன் வேண்டும் என்று சொன்னேன்..ஆனால் அது தவறு என்று புரிந்து விட்டது..நான் இப்போ சொல்றேன் ...பொருளாதார அடிப்படையில் ரிசெர்வசன் கொண்டாங்கடா..

பதிவு செய்தவர்: wisdom
பதிவு செய்தது: 23 Jul 2010 6:07 pm
Fix income limit. Whoever is below that, they are backward, others are forward.

கருத்துகள் இல்லை: