திங்கள், 19 ஜூலை, 2010

மேற்கு வங்கத்தில் பயங்கரம்-2 ரயில்கள் நேருக்கு நேர் மோதல்-60 பேர் பலி

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் இரண்டு ரயிலக்ள் இன்று அதிகாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் 60 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சைந்தியா என்ற ரயில் நிலையத்தில் இந்த பயங்கர விபத்து நேர்ந்தது. இன்று அதிகாலை 1.54 மணியளவில் ரயில் நிலையத்தின் 4வது பிளாட்பாரத்தில் புறப்படத் தயாராக பாகல்பூர்-ராஞ்சி வனாஞ்சல் எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த நியூ கூச்பிகார்-சியால்தா உத்தரபங்கா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் எனத் தெரிகிறது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்றது.
காயமடைந்தவர்கள் பிர்பும் நகரில் உள்ள சூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன.

விபத்து குறித்து தகவல் அறிய

விபத்து குறித்து தகவல் அறிய கட்டுப்பாட்டு அறைகளை கிழக்கு ரயில்வே அமைத்துள்ளது. அதன் விவரம் சியால்தா (033-23503535, 033-23503537), மால்டா (06436-222061), பாகல்பூர் (06412-4222433), ஜமல்பூர் (063444-3101)

பெட்டிகளை உடைத்துத 32 உடல்கள் மீட்பு

மோதிய வேகத்தில் ரயில் பெட்டிகள் சின்னாபின்னமாக சிதறிப் போயின. ஒன்றன் மீது ஒன்றாக விழுந்து அமுக்கி விட்டன. சில பெட்டிகள் ரயில் நிலையத்தில் இருந்த நடை பாலம் மீது போய் மோதி நின்றது.

கேஸ் கட்டர்கள் மூலம் பல பெட்டிகளை உடைத்து உள்ளே இருந்து 32 உடல்கள் வரை மீட்கப்பட்டன. படுகாயமடைந்த நிலையில் இருந்தவர்களும் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மீட்கப்பட்டனர்.ரத்தம் இல்லை
  Read:  In English 
படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் ஏற்ற போதிய அளவில் ரத்தம்இல்லாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்து மருத்துவமனைகளிலிருந்து 175 பாட்டில் ரத்தம் கொண்டு வரப்பட்டு கொடுக்கப்பட்டது.

மேலும் டாக்டர்களும் போதிய அளவில் இல்லாததால் சிகிச்சை அளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து டாக்டர்கள் விரைந்து சென்று சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேற்கு வங்க மாநிலம் சைந்தியா ரயில் நிலையத்தில், உத்தரபங்கா எக்ஸ்பிரஸும், வனாஞ்சல் எக்ஸ்பிரஸும் மோதிக் கொண்ட விபத்தில் சில சந்தேகங்கள் இருப்பதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்துக் கூறுகையில், விபத்துக்கான காரணம் குறித்து நான் சிலவற்றை சந்தேகப்படுகிறேன். சில சந்தேகங்கள் எங்களுக்கு வந்துள்ளன. இருப்பினும் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல. இந்த விபத்துக்கான காரணத்தை அறிய தீவிரமாக முயற்சிப்போம்.

இதுகுறித்து விசாரணைக்கு விடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தலா ஒருவருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும்.

படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25,000மும் அளிக்கப்படும் என்றார் மமதா.

2 மாதத்தில் 2வது கோர விபத்து

கடந்த மாதம்தான் ஜார்காம் அருகே மாவோயிஸ்ட் நக்சலைட்கள் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளாகி 148 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மேலும் ஒரு கோர விபத்து நடந்து 60 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: மனிதம்
பதிவு செய்தது: 19 Jul 2010 6:26 pm
அன்றே பதவியை ராஜினாமா செய்ய போவதாக சொன்னாயே மம்தா, இன்னும் போக வில்லையா ?


பதிவு செய்தவர்: சுந்தர்
பதிவு செய்தது: 19 Jul 2010 6:22 pm
அரசு ஊழியம் என்றாலே அவர்கள் செயல்படுவது மிகவும் அலட்சியம் தான் என்ன தான் அரசு ஊளியமோ போங்கள்
சே,என்ன அசிங்கமான ஒரு நிர்வாகம். பேசாமே ரயில்வே முழுவதும் பிரைவேட் கு ஒப்படைத்து விடலாம். ஒரு வருடத்துக்கு எத்தணை உயிர்களை வாங்குவது .இந்தியாவில் உயிர்க்கு மதிப்பே இல்லே...
இந்தியாவில் இதுபோல் எத்தனை விபத்துக்கள் நேர்ந்தாலும் அரசு ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதவரையில் இது போன்ற விபத்துக்கள் தொடர் கதையே. உயிர் இழந்த என் உடன் பிறவா சகோதர சகோதரிகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
sampath - london,இந்தியா
2010-07-19 11:36:29 IST
ஐயோ ! இந்தியா எப்பதான் முன்னேறப் போகிறதோ தெரியவில்லை. கடவுள் தான் காப்பாத்தனும் ரயில்வே துறையை....
mohan - chennai,இந்தியா
2010-07-19 11:31:53 IST 
Jalal - Delhi,இந்தியா
2010-07-19 10:41:52 IST
இது ரயில்வே துறையின் அலட்சியமான போக்கை காட்டுகிறது. இவர்கள் வேலை செய்கிறார்களா இல்லையா என்று தெரியவில்லை. இவர்களின் இந்த செயலால் இத்தனை மரணம் நேரிட்டு உள்ளது. இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பார்கள் ? இவர்களுக்கு ஒரு உயிரின் மதிப்பு தெரியவில்லை.இதனால் எத்தனை குடும்பங்கள் பாதிக்க படும் என்பதை அவர்கள் அறிவார்களா ? இறந்தவர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொள்கிறேன் ....
நல்ல தமிழன் - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-19 10:27:47 IST
என்ன கொடுமை சார்,,,,,வேற நாட்டில் இது போல சம்பவங்கள் நடக்காது.நம்ம நாட்டில் கவர்மென்ட் ஊழியர் எல்லாம் வேலை செய்ய மாட்டார்கள்.ப்ளீஸ் எல்லாத்தையும் மாத்தனும்....
Murugesh G - Pondicherry,இந்தியா
2010-07-19 09:53:55 IST
Bad monday ..........
டுபுக்கு பாண்டி - bangalore,இந்தியா
2010-07-19 09:48:00 IST
டேய் என்னடா இன்னும் நக்ஸல் மேல பழி போடாம இருக்கீங்கோ.........
RP கமலக்கண்ணன் - Kadugli,சுரிநாம்
2010-07-19 09:34:31 IST
ரயில்வேயில் பணி புரியும் பணியாளர்களின் கவன குறைவு தான் இது போன்ற விபத்துகள் நடக்கிறது. பாவம் அப்பாவி பயணிகள் தான் பலியாகிறார்கள். இது போன்ற பணியாளர்கள் மீது அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்....
பார்த்திபன் T - Periyakulam,இந்தியா
2010-07-19 09:13:37 IST
விபத்தில் பலியான ஒன்றும் தெரியாத என் உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்....
கண்ணன் - singapore,இந்தியா
2010-07-19 09:10:09 IST
ஹே ரயில்வே ஸ்டுப்பிட்ஸ் , சம்பளம் மட்டும் வாங்குனா பத்தாது . எவ்வலவு கவனம் உங்களுக்கு , எவ கிட்டயாவது கவனம் இருந்துச்சா!!.. மம்தா உனக்கு ரயில்வே மினிஸ்டர் ஒரு கேடா , போயி உன்னைப்பார் . உன்னால நாட்ட பாக்க முடியாது .... ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் மே ஹெல்ப்.. ஆல் செல்பிஷ் ஐயோ இண்டியா வெரி சேட்...
Anita - Brisbane,ஆஸ்திரேலியா
2010-07-19 08:49:08 IST
These kind of things Happens only in India!!! So Ridiculous...Very sad to hear this news.....

கருத்துகள் இல்லை: