காலே நகரில் இன்று இந்தியா, இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அந்த அணியின் தொடக்க வீரர்களான பரனவிதனாவும், தில்ஷானும் வலுவான நிலைக்கு அணியை கொண்டு சென்று ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாக திருப்பினர். தில்ஷான் 25 ரன்கள் எடுத்த நிலையில் மிதுன் பந்து வீச்சில் வீழந்தார்.
ஆனால் அதன் பின்னர் பரனவிதனாவும், சங்கக்காராவும் இணைந்து அடித்து நொறுக்க ஆரம்பித்து விட்டனர். இருவரும் சதம் அடித்து இந்தியாவை சோதித்து விட்டனர்.
சங்கக்காரா 103 ரன்கள் எடுத்த நிலையில் ஷேவாக் பந்து வீச்சில் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் பரனவிதனா தொடர்ந்து அடித்து நொறுக்கி வந்தார்.
ஆட்ட நேரஇறுதியில் மழை வந்ததால் முன்கூட்டியே முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்திருந்தது. பரனவிதனா 112 ரன்களுடனும், ஜெயவர்த்னே8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியஅணியின் பந்து வீச்சு இன்று மகா மோசமாக இருந்தது. யாருடைய பந்துவீச்சும் இலங்கை மட்டையாளர்களை சிரமப்படுத்தவில்லை. ஏதோ பந்து வீச்சு பிராக்டிஸ் போல இந்திய பந்து வீச்சாளர்கள் பந்துகளை போட்டவண்ணம் இருந்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றுவதாக இருந்தது.
பதிவு செய்தது: 18 Jul 2010 7:25 pm
அப்படியே மோசமா பேட் செஞ்சி எனக்கு 800 விக்கெட் குடுங்கப்பா
பதிவு செய்தது: 18 Jul 2010 7:18 pm
இந்தத் தொடரில் தோற்கும் பட்சத்தில், இந்திய அணியினர் பேசாமல் இலங்கைக் குடியுரிமையைப் பெற்று அந்நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடலாம். இலங்கையின் புனர்வாழ்வுக்கான பணிகளைச் செய்ய, இலங்கை அரசும் இந்தியாவில் இருந்து ஆள்பிடித்துக் கொண்டிருக்கிறதாம். திரைப்படத் தொழில் அல்லது கிரிக்கெட் ஆட்டக் காரர்களாக இருந்தா சிறப்புச் சலுகைகள் கிடைக்கு என்று ராஜபக்ஷே கருதுகிறாராம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக