வியாழன், 22 ஜூலை, 2010

நீதிபதி சாந்தி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பூவரசி

சென்னையில் மூன்று வயது சிறுவனை படுகொலை செய்த பூவரசியை தாக்க பொதுமக்கள்  முற்பட்டதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி சாந்தியின் வீட்டிற்கு அழைத்துச்சென்று நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.

 சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமாரின் மீதான காதல் வெறியால் அவருடைய மகன் ஆதித்யாவை படுகொலை செய்தார்.

இது தொடர்பாக பூவரசியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
இந்நிலையில் எஸ்பிளனேடு போலீசார் பூவரசியை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் நேர் நிறுத்த சென்றனர்.

ஆனால் மூன்று வயதே ஆன சிறுவனை படுகொலை செய்ததால் ஆத்திரம் கொண்ட பொதுமக்களும் , வழக்கறிஞர்களும்
பூவரசியை தாக்குவதற்கு தயாராக இருந்தனர்.
இதனால் பூவரசியை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்தே அவர் நீதிபதி சாந்தியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: