திங்கள், 12 செப்டம்பர், 2011

TNA எனது அழைப்பை ஏற்றிருந்தால் இழப்புக்கள் நேர்ந்திருக்காது! - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

வன்னிப் போரை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு தாம் விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த காரணத்தினாலேயே எமது மக்கள் விலை மதிக்க முடியாத உயிர் உடமைகளை இழக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டதென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதன் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதிகளுடன் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கும் ஈ.பி.டி.பி.க்கும் தொடர்புகள் இருப்பதாக தீயசக்திகள் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு மக்களை குழப்பி வருகின்றனர். குறிப்பாக நல்லூரிலுள்ள சங்கிலியன் சிலை புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்ட போது அது தொடர்பில் பல்வேறு செய்திகளை வெளியிட்ட உள்ளூர் பத்திரிகைகள் சில மக்களை குழப்பியிருந்ததாகவும் பின்னர் சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதன் செய்திகளின் உண்மைத் தன்மைகளை வெளியிடாமல் இருந்ததையும் சுட்டிக் காட்டினார். (மேலும்)

கருத்துகள் இல்லை: