திங்கள், 12 செப்டம்பர், 2011

வெடிக்கும் அபாயத்தில் தங்கம்

goldfutureதங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அபார வளர்ச்சி, இதே வேகத்தில் இருக்கும் என்று நினைத்து, வீடு, நில புலன்களை எல்லாம் விற்று, தங்கமாக வாங்கிக்கொள்ளலாம், அது எதிர்காலத்தில் நம்மை கோடீசுவரன் ஆக்கிவிடும் என்று ஆசைக்கனவில் மிதப்பவர்களுக்கு, திருவிழாவில் பலூன் வாங்கி, பேராசையுடன் ஊதி அதை பறிகொடுத்த பரிதாப நிலை ஏற்படலாம் என்று பொருளாதார நிபுணர்கள் அபாய சங்கு ஊதுகிறார்கள். இதே போல் தான் 1980-ம் ஆண்டு தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு எகிறியது. அதாவது, ஒரு பவுன் தங்கம் 1,136 ரூபாயாக இருந்தது. அது, திடீர் என்று ரூ.1,410 ஆக உயர்ந்தது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சி, பணவீக்கம், ஆப்கானிஸ்தானில் ரஷியா படையெடுப்பு என்று இதற்கு காரணம் சொல்லப்பட்டது. அந்த சமயத்தில், இன்னும் தங்கம் விலை உயரும் என்ற எண்ணத்தில் பலர் அதில் முதலீடு செய்தனர். ஆனால் பரிதாபம், அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை அதளபாதாளத்துக்கு, அதாவது 69 சதவீதம் குறைந்து ஒரு பவுன் ரூ.1,080 ஆக குறைந்தது. இதே நிலை எதிர்காலத்திலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்போது நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்துகொண்டு இருப்பதால், ஏராளமானவர்கள், தாங்கள் பங்கு சந்தையில் செய்து இருந்த முதலீடுகளை திரும்பப் பெற்று அதை தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். இதனால் பங்கு மார்க்கெட்டும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பங்கு சந்தை ஒரு தெளிவான நிலையை அடையும் என்றும், அதன் பின் தங்கம் விலை வெகுவாக குறைய வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். (மேலும்

கருத்துகள் இல்லை: