ஞாயிறு, 21 நவம்பர், 2010

Newsweek:நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா

அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான ‘Newsweek’,    இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது
நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள நொவெம்பர் 22ம் திகதிக்கான புதிய இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.     நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் இறைவன் எனும் பொருள்படும் தொணியில் ‘God of all things’ என அப்படத்தின் முன் அச்சிடப்பட்டுள்ளது.   இது தொடர்பில் அமெரிக்க இந்துக்கள் சங்கத்தின் நிர்வாகி சுஹக் சுக்லா தெரிவிக்கையில், இந்து மதத்தின் உண்மையான, ஆழமான தத்துவங்களை புரிந்துகொள்ளாமல், கடவுளரின் உருவங்களை இவ்வாறு நகைச்சுவையாக, அரசியலுக்கு ஏன் பயன்படுத்துகிறார்கள் என தெரியவில்லை.
நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலம் ஒரு வேடிக்கை நிகழ்வல்ல. ஆழமான கருத்துக்களை கூறுவது என தெரிவித்துள்ளார்.
இந்துக்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அமெரிக்காவில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பேர்ர்கர்கிங் விளம்பரத்தில் சரஸ்வதி படம் அச்சிடப்பட்டது,   இந்தியானா ஜோன்ஸ் திரைப்படத்தில் இந்துமதம் கேலியாக்கப்பட்டது என்பவற்றை தொடர்ந்து தற்போது நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள புதிய அட்டைப்படமும் இந்துக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: