திங்கள், 1 நவம்பர், 2010

தரம் தாழ்ந்த சினிமாக்கள்! டைரக்டர் மிஷ்கின் தாக்கு!!

Good films rare in Kollywood: Mysskin‎தமிழில் சமீப காலமாக தொடர்ந்து தரம் தாழ்ந்த படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன என்று டைரக்டர் மிஷ்கின் கூறியுள்ளார்.  சென்னையி்ல நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் டைரக்டர் மிஷ்கின் கலந்து கொண்டு பேசினார். அவர் கூறுகையில், இப்போது வருகின்ற தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது தமிழ் திரைப்படத்தின் தரம் கீழ் நோக்கி போய்க் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. தரம் தாழ்ந்த படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கின்றன. நான் இயக்கிய "அஞ்சாதே, "சித்திரம் பேசுதடி ஆகிய படங்கள் தரம் தாழ்ந்த படங்கள்தான். வியாபாரத்துக்காகவும், ரசிகர்களைக் கவருவதற்காகவும் நல்ல சினிமாக்களில் சில விஷயங்களை திணிக்க வேண்டியிருக்கிறது. சில விஷயங்களுக்காக இரண்டு படங்களிலும் வித்தியாசமான முறையில் படமாக்கப்பட்ட குத்துப்பாட்டை திணிக்கப் போய் என்னை "குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லிவிட்டார்கள். நல்ல படம் எது என்பதற்கு நான் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது, என்றார்

கருத்துகள் இல்லை: