செவ்வாய், 26 அக்டோபர், 2010

அரசியல் தீர்வுத் திட்டத்தைப் பெறுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார்-ஜனநாயக மக்கள் முன்னணி..!


தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொள்வதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் என ஜனநாயக மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. அரசியல் தீர்வினை எட்டுவதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலர் குமாரகுருபரன் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை பெற்றுக் கொடுக்கும் முனைப்புக்களில் காத்திரமான பங்களிப்பினை வழங்கத் தமது கட்சி தயார். தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம். இந்த நிலைப்பாடு வரவேற்கத்தக்கது. ஆளும்கட்சி பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளது. அரசியல் தீர்வுத் திட்டம் குறித்த முனைப்புக்களில் தீவிரம் காட்ட இதுவே சிறந்த தருணமாகும். எவ்வாறெனினும், இந்த முனைப்புக்களை யதார்த்தபூர்வமானதாக மாற்றப்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றவர்கள் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்களை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: