செவ்வாய், 26 அக்டோபர், 2010

Raid.Reddy Bros,ரெட்டி சகோதரர்களின் நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகளில் ஐடி ரெய்டு

Reddy Brothersபெங்களூர்: கர்நாடகத்தின் ரெட்டி சகோதரர் அமைச்சர்களில் ஒருவரான ஸ்ரீராமுலுவின் வீட்டிலும், அமைச்சர் ஜனார்தன ரெட்டியின் வழக்கறிஞரின் அலுவலகத்திலும், இவர்களுக்கு ஆதரவான 2 பாஜக எம்எல்ஏக்கள் வீட்டிலும், வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர்.

ரெய்ட் நடத்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏக்களில் ஒருவர் சுரேஷ்பாபு. இவர் காம்ப்ளி தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இன்னொருவரான நாகேந்திரா கூடலகி தொகுதி எம்.எல்.ஏ ஆவார். இவர்கள் இருவரும் ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டிக்கு மிகவும் நெருங்கியவர்கள் ஆவர்.

பெல்லாரி, பெங்களூர், ஹோஸ்பேட்டை, காம்ப்ளி ஆகிய இடங்களில் உள்ள இவர்களுக்கு சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் என 60 இடங்களில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.

ரெய்டுக்குள்ளான மூன்றாவது நபர் அலி கான் என்பவர். இவர் ஜனார்த்தன ரெட்டியின் தனி செயலாளர் ஆவார். இவரது வீடும், அலுவலகமும் சோதனைக்குள்ளானது.
  Read:  In English 
காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி, பாஜக அரசைக் காப்பாற்றும் முயற்சிகளில் ரெட்டி சகோதரர்களின் பணம் பயன்படுத்தப்பட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இந்த ரெய்ட் நடந்து வருகிறது.

ஆந்திர-கர்நாடக எல்லைப் பகுதியில், சட்டவிரோத சுரங்கத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கின்றனர் ரெட்டி சகோதரர்கள். இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக கோடி கோடியாக சம்பாதித்து வருவதாக நீண்ட காலமாகவே குற்றச்சாட்டு உள்ளது,. ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டியும், கருணாகர ரெட்டியும் அமைச்சர்களாக உள்ளனர். இவர்களது உறவினரான ஸ்ரீராமுலுவும் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவு செய்தவர்: நான்
பதிவு செய்தது: 25 Oct 2010 10:18 pm
அப்போ இந்த ஊழலைக் கண்டுகொள்ளக்கூடாதுங்கிறீங்களா?

பதிவு செய்தவர்: காங்கிரஸ்
பதிவு செய்தது: 25 Oct 2010 7:44 pm
Spectrum - 20000 Crores, Common Wealth Games 70000 Crores எல்லாம் மக்கள் மறந்துட்டாங்க ஹையோ ஹையோ.
பதிவு செய்தவர்: அதிமுக
பதிவு செய்தது: 25 Oct 2010 8:51 pm
அது நாங்க ஆட்சிக்கு வந்தவுடனே வைப்போம் ஆப்பு.

பதிவு செய்தவர்: வம்பன்
பதிவு செய்தது: 25 Oct 2010 7:00 pm
டேய் காங்கரஸ் ஆட்சியில் இருக்கும் டெல்லியில்தான் காமன்வெல்த்தில் ஆயிரகணக்கான கோடிகளை கொள்ளை அடித்தார்கள்.

பதிவு செய்தவர்: ரெட்டி கெட்டி
பதிவு செய்தது: 25 Oct 2010 5:09 pm
நான் இருநூறு கோடி அடுசேன். நான் ரெண்டு கோடி அடுசேன். நான் இருபது லக்சம் அடுசேன். - நல்ல காற்றனுங்க வெரல

பதிவு செய்தவர்: கொம்பன்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:41 pm
பாஜகவை துக்கி எறிந்தால் எல்லாம் சரியாய் போய்டும்

பதிவு செய்தவர்: வேலுமணி
பதிவு செய்தது: 25 Oct 2010 4:31 pm
இந்த ரெய்டின் மூலம் காங்கிரஸ் ஆந்திராவிலும் செல்வாக்கு இலக்கும். நந்தவனத்தில் ஓர் ஆண்டி நாலாறு மதமாய் குயவனை வேண்டி,.......
பதிவு செய்தவர்: சென்னை
பதிவு செய்தது: 25 Oct 2010 5:47 pm
நண்பா, இது நடப்பது கர்நாடக... அப்புறம் எப்படி ஆந்திரா வில் செல்வாக்கு இழக்கும்? நீ LTTE ah? இல்லே DMK?

பதிவு செய்தவர்: prem
பதிவு செய்தது: 25 Oct 2010 2:40 pm
Congress governement misusing government machinery for its own use is this same congress government has any guts to sent IT people in to Jagan mohan reddy who has paid about 85 crores as an advance tax for six months period karnataka people will give fitting reply to congress like gujarat and bihar
பதிவு செய்தவர்: குரோம்
பதிவு செய்தது: 25 Oct 2010 4:24 pm
ஏன்டா டுபுக்கு வருமான வரி கட்டினால் தப்பா

கருத்துகள் இல்லை: