செவ்வாய், 26 அக்டோபர், 2010

மாணவி சுகன்யா கொலை வழக்கு: பாதிரியார்கள் சிக்குகிறார்கள்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தோழுரைச் சேர்ந்த சண்முகம் மகள் சுகன்யா (17). ஓமலூரில் தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்தார்.

2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி மாணவியைக் காணவில்லை. 18ம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவி சடலமாக மிதந்தார்.
ஓமலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். மாணவியை பலாத்காரம் செய்து கொன்று கிணற்றில் வீசி விட்டதாக கூறி ஆத்திரம் அடைந்த மக்கள் பள்ளியை சூறையாடினர். சிபிசிஐடி போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
<இந்நிலையில் மாணவி சுகன்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. சுகன்யாவின் கருப்பையில் விந்து இருப்பது தெரியவந்தது. எனவே மாணவியை பலாத்காரம் செய்தது யார்? என்ற கேள்வி எழுந்தது. கருப்பையில் இருந்த விந்துக்கு உரியவர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். >இது தொடர்பாக சந்தேகப்படும் 8 நபர்களிடம் மரபணுசோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். அவர்கள் யார்? என்ற பட்டியலை ரகசியமாக எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், நீதிமன்ற அனுமதி பெற நடவடிக்கை எடுத்துள்ளனர். கோர்ட் அனுமதி கிடைத்தவுடன் விந்து சோதனை செய்யப்படும்.
8 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ள 6 பேர் 50 வயதைக் கடந்தவர்கள் என்றும் அதில் சில பாதிரியார்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பள்ளியின் விடுதிக்கு வந்து தங்கியவர்கள் மத்தியில் பீதி, பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் 4 ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மாணவி சுகன்யா வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை: